மோசடிக் குற்றச்சாட்டுகளில் சிறைத்தண்டனை பெற்ற பொன்சேகா, கடந்த வியாழக்கிழமை முதல் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

வியாழக்கிழமை இரவில் முன்னாள் இராணுவத்தளபதி பொன்சேகா வார்ட் "S" சிறைக்கூடத்திற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு அவர் விழித்தெழுந்தார். அவர் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அறையில் மலசலகூடம் இருந்தது. கழிவறை பிளாஷ் சரியாக செயற்படவில்லையென அவர் முறைப்பாடு செய்திருந்தார்.
விடுதிக்கு வெளிப்புறத்தே இருந்த நீர்த்தாங்கிக்கு அவர் செல்ல வேண்டியிருந்தது. அங்கு அவர் வாளியை உபயோகித்து தண்ணீர் அள்ளி கழுவ,குளிக்க வேண்டியிருந்தது. பின்னர் ஒரு கையில் கிண்ணத்தையும் மறு கையில் தட்டையும் ஏந்தியவாறு ஏனைய குற்றவாளிகளுடன் காலை உணவைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றிருந்தார்.
சோறும் தேங்காய்ச்சம்பலும் வழங்கப்பட்டது. மருத்துவர் அவரை பரிசோதித்தார். சிறைச்சாலையிலிருந்த தையல்காரர்கள் அவரின் அளவுக்கு ஜம்பர்களை வழங்குவதற்காக அளவெடுத்தார்கள். மதியநேர உணவுக்காக மீண்டும் கோப்பை,தட்டுடன் அவர் வரிசையில் இணைந்துகொண்டார்.
மதிய உணவாக சோறும் வெள்ளரிக்காய் கறியும் பருப்பும் கீரையும் வழங்கப்பட்டது. அத்துடன், சிறிய துண்டு மீனும் குழம்பும் இருந்தது. உடனடியாக இரண்டு மணியளவில் அவர் தனது சிறைக்கூடத்திற்குத் திரும்பிவிட்டார். பின்னர் வெளியில் சிறிதுநேரம் நின்றிருந்த அவர் இரவு ஏழு மணிக்கு மீண்டும் சிறைக்கு திரும்பிவிட்டார். அந்த நேரம் விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன. அடுத்த நாள் காலை வரை அவர் இருட்டுக்குள் உறங்க வேண்டியிருந்தது.
இது இப்போது பொன்சேகாவின் அன்றாட நடவடிக்கையாக அமைந்துள்ளது. இராணுவத்தை வழிநடத்திய முன்னாள் இராணுவத்தளபதியின் அன்றாட நிகழ்வாக இது அமைந்திருக்கின்றதென்று சண்டே ரைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



sarath fonseka is hardcore criminal and he should be punished prison for life