Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் போராளி வித்து 2ம் லெப். மாலதி அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் பிரான்சின் கிழக்குப் பாகத்தில் இருக்கும் ஸ்ரார்ஸ்பூர்க் நகர மக்களால் St Vincent de Paul மண்டபத்தில் நினைவுகூரப்பட்டது.

ஈகைச்சுடரினை மகளிர் அமைப்பின் சார்பில் திருமதி. மேரி யோசப்பின் பாக்கியராஜா அவர்கள் ஏற்றிவைத்தார். அகவணக்கம் தேசியத் தலைவர் அவர்களினது சிந்தனை மலர்வணக்கம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து 2ம் லெப். மாலதி அவர்களினுடைய நினைவுப் பகிர்வை அடுத்து அனைத்துலகத் தமிழ்ப் பெண்கள் அமைப்பினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கை வாசித்தளிக்கப்பட்டது. தொடர்ந்து கவிதைகளும் எழுச்சிப்பாடல்களும் இடம் பெற்றிருந்தன.

நிகழ்வின் நிறைவில் 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்'; என்ற பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற எழுச்சிக் கோசத்துடனும் நிறைவுக்கு வந்தது.

தமிழ் ஈழம் என்பது உலகின் முதற்குடியும், மூத்த குடியுமான தமிழ் இனத்தின் தாய் மடி.












மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க்கில் நடைபெற்ற 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com