Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கொள்கைவிளக்க பொதுக்கூட்டம் மதுரை மாவட்டம் சோழவந்தான் ஒன்றியம், சோழவந்தான் நகரில்09.10.2010 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது . கூட்டத்திற்கு சோழவந்தான் ஒன்றிய பொறுப்பாளர் மாரியப்பன் தலைமை ஏற்றார் . திரு கசேந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

மதுரை புறநகர் மாவட்ட பொறுப்பாளர் செங்கண்ணன், , மதுரை நான்காம் பகுதி பொறுப்பாளர்கள் சிவானந்தன், ராமநாதன், நாகராசு,மற்றுன் பாலா,அரசகுமார் புறநகர் பொறுப்பாளர்கள், ஐந்தாம் பகுதி பொறுப்பாளர்கள் , தளபதி மாரி உள்ளிட்டவர்களும் சோழவந்தான் பகுதியின் தமிழ் உறவுகளும் கலந்துகொண்டனர்.

இயக்குனர் சிபிச்சந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன்,, ஐயா தமிழ்க்கூத்தன் ,செந்தில், மாரியப்பன் , மகளிரணி பொறுப்பாளர் திருமதி மணியம்மாள் ஆகியோர் உரை ஆற்றினர்.

பொறியாளர். செ. வெற்றிக்குமரன்,

மாநில ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் பேரியக்கம்.

அலைபேசி : 9043035040


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)

  1. நாம் தமிழர் கட்சிக்கு, இளமாறன் எழுதுவது,
    தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு நடத்துகிறீர்கள், மகிழ்ச்சி. அதோடு‍, இந்தியாவில் விடுதலை புலிகள் மீது‍ தடை நீடிக்கப்பட்டுள்ளது, அதை உறுதிப்படுத்த மத்திய தீர்பாயம் தில்லியில் இரண்டு‍ முறை கூடி‍ விசாரனை நடத்தியது‍, பின்பு சென்னையில் கூடி‍ விசாரனை நடத்தியது‍, தில்லியிலும், சென்னையிலும் திரு‍ வைகோ அவர்கள் ஆஜராகி விசாரனையில் கலந்து‍ கொண்டார், பின்பு, நடந்த விசாரனையில் திரு‍ நெடுமாறன், மக்கள் உரிமை கழகத்தின் தலைவர் திரு‍ புகழேந்தி ஆகியோர் ஆஜராகி விசாரனையில் கலந்து‍ கொண்டார்கள். தமிழக அரசின் வக்கீல், புலிகளின் உறுப்பினர்கள் மட்டுமே விசாரனையில் கலந்து‍ கொள்ள வேண்டும் என்றார், புலி உறுப்பினர் திரு‍ ராபின்சன் சார்பாக, அனுப்பட்ட ஆவணங்கள் சரியாக இல்லை என்று‍ நிராகரிக்கப்பட்டது. மத்திய தீர்பாயத்தின் அடுத்த விசாரனை உதகையில் வரும் (அக்டோபர்) 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது‍. இதற்கு‍ இடையில் மக்கள் உரிமை கழகத்தின் தலைவர் திரு‍ புகழேந்தி அவர்கள் மத்திய தீர்பாயத்தின் ஆணைக்கு‍ எதிராக சென்னை உயர் நீதிமன்றம் சென்றுள்ளார், நீதிமன்றமும் வழக்கை விசாரனைக்கு‍ எடுத்து‍ கொள்ள உள்ளது. இந்த விஷயம் அனைத்தையும் தங்கள் அறிந்திருப்பீர்கள், அப்படி‍ இருக்கையில், இது‍ போன்ற கூட்டத்தை விட அவசியமானது, விடுதலை புலிகளின் மேல் உள்ள தடையை நீக்குவது, இதை தங்களுக்கு‍ கூறும் காரணம், உங்கள் கட்சியின் சார்பாக வக்கீல் வைத்து‍ மத்திய தீர்பாயத்தில் ஆஜராவதும். சென்னை உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ள இருக்கும் வழக்ககில் தங்கள் கட்சியும் சேர்ந்து‍ கொள்வது‍ அவசியமானது‍ , இது‍ போல் உங்களுக்கு‍ தெரிந்த தமிழ் இயக்கங்களையும், மாணவர் இயக்கங்களையும், இதில் தனி தனியாக ஈடு‍ படுத்த முனையுங்கள். மேலும்,புலிகளின் உறுப்பினர்கள் மட்டுமே விசாரனையில் கலந்து‍ கொள்ள முடியும் என்று‍ மத்திய தீர்பாயம் சொல்வதால், தமிழகத்தில் தங்கியிருக்கும் (அகதிகள் முகாம்களி்ல்) முன்னாள் விடுதலை புலிகளை பயன்ப்படு்த்தி,அவர்களுக்கு‍ வக்கீல் வைத்து‍ மத்திய தீர்பாயத்தில் அஜராக வையுங்கள்,சமீபத்தில் கைதாகி உள்ள விடுதலை புலிகளின் உளவு பிரிவு தமிழக பொறுப்பாளர் (பெயர் தெரியவில்லை)அவரை கூட இதில் பயன் படுத்தலாம். விடுதலை புலிகள் மீது‍ உள்ள தடைகளை இந்தியாவில் நீக்கினால் தான், மற்ற நாடுகளிலு‍ம் தடையை நீக்க முடியும். விடுதலை புலிகள் ஜனநாயக வழியில் இயங்குவதற்க்கு‍ கூட,அவர்கள் மீது‍ உள்ள தடையை நீக்குவது‍ அவசியம்.
    புலிகள் நடாத்தும் ஈழப் போராட்டம் ஒன்றும் பயங்கரவாத யுத்தமில்லை
    என்றும், தமிழர்கள் சுயநிர்ணய உருமைகளுக்கு உரித்துடையவர்கள் என்று
    சமீபத்தில் நியூசிலாந்தின் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
    ஈழப்போராட்டத்தை முன்னெடுக்க நியூசிலாந்தின் உச்ச நீதிமன்றத்தின்
    தீர்ப்பே போதும் :

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com