.....தமிழீழ மக்களுக்கான தாயகத்தை எதிர்காலத்தில் அமைப்பதற்கான படிக்கட்டத்தில் புதிய அத்தியாயம் ஒன்றைத் தோற்றுவித்துள்ளது.
உலக மாந்தர்களுடைய அனைத்து வரலாறுகளிலும் மனிதத் தேவைகள் அனைத்தும் ஆரம்பத்தில் கற்பனைகளாகவும், கனவுகளாயும் விரிந்து ஈற்றில் நடைமுறைச் சாத்தியமாகியுள்ள வரலாறுகளை நாம் காணுகின்றோம்.
எனவேதான் இங்கும் ஆக்கிரமிப்பாளர்களுடைய வன்கொடுமையினால் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ள ஈழத் தமிழர்களும் தாயகக்கனவு குறித்த எதிர்பார்ப்பில் வாழ்வதும், சிந்திப்பதும் இயல்பானதொன்றாக அமைந்துவிடுகிறது.
எனவேதான் அந்த வட்டகைக்குள் உள்ளடங்கும் ஈழத்துக் கிராமங்களிலும் , நகர்களிலும் வசித்து இன்று உலகப்பரப்பெங்கும் இடம்பெயர்ந்து வாழும் மக்களாகிய நாம் "நாடு கடந்த தமிழீழ அரசுக்கான" யாப்பின் உருவாக்கம் குறித்து நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் கொண்ட மகிழ்வில் திளைத்து நிற்கின்றோம்.
அத்தோடு மேலும் அதற்கான உறுதியான ஆதரவை இந்தச் சந்தர்ப்பத்திலே வெளிப்படுத்தி வாழ்த்துகின்றோம். தன்னலமற்ற தியாகம், அர்ப்பணிப்பு, விடா முயற்சி ஆகிய தடங்களிலே நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் பயணித்துக் கொண்டு பிரதமர் திரு.உருத்ரகுமாரன் தலைமையிலான "நாடுகடந்த தமிழீழ அரசை" தொடர்ந்தும் பலப்படுத்த வேண்டுமென இந்தச் சந்தர்ப்பத்திலே வேண்டுகின்றோம்.
உரும்பிராய், வல்வெட்டித்துறை, புன்னாலைக்கட்டுவன், புங்குடுதீவு, ஏழாலை, கட்டுவன், மயிலிட்டி, உடுப்பிட்டி, கோண்டாவில், நயினாதீவு, வன்னி, ஊரெழு, உருத்திரபுரம், இளவாலை, காரைநகர், நாவாந்துறை, மானிப்பாய், காங்கேசன்துறை மக்கள், விளையாட்டுக் கழகங்கள், பழைய மாணவர் சங்கங்கள்.



0 Responses to "நாடு கடந்த தமிழீழ அரசுக்கான" யாப்பின் உருவாக்கம் குறித்த நம்பிக்கையும், வாழ்த்தும்