பட்டுக்கோட்டை நாம் தமிழர் கட்சியின் சார்பில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு எழுச்சி நாள் தஞ்சை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழ.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் திலீபன் புகைபடத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



நாம் தமிழர் கட்சிக்கு, திரு பார்த்திபன், தமிழ்நாடு
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு நடத்துகிறீர்கள், மகிழ்ச்சி. அதோடு, இந்தியாவில் விடுதலை புலிகள் மீது தடை நீடிக்கப்பட்டுள்ளது, அதை உறுதிப்படுத்த மத்திய தீர்பாயம் தில்லியில் இரண்டு முறை கூடி விசாரனை நடத்தியது, பின்பு சென்னையில் கூடி விசாரனை நடத்தியது, தில்லியிலும், சென்னையிலும் திரு வைகோ அவர்கள் ஆஜராகி விசாரனையில் கலந்து கொண்டார், பின்பு, நடந்த விசாரனையில் திரு நெடுமாறன், மக்கள் உரிமை கழகத்தின் தலைவர் திரு புகழேந்தி ஆகியோர் ஆஜராகி விசாரனையில் கலந்து கொண்டார்கள். தமிழக அரசின் வக்கீல், புலிகளின் உறுப்பினர்கள் மட்டுமே விசாரனையில் கலந்து கொள்ள வேண்டும் என்றார், புலி உறுப்பினர் திரு ராபின்சன் சார்பாக, அனுப்பட்ட ஆவணங்கள் சரியாக இல்லை என்று நிராகரிக்கப்பட்டது. மத்திய தீர்பாயத்தின் அடுத்த விசாரனை உதகையில் வரும் (அக்டோபர்) 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கு இடையில் மக்கள் உரிமை கழகத்தின் தலைவர் திரு புகழேந்தி அவர்கள் மத்திய தீர்பாயத்தின் அணைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் சென்றுள்ளார், நீதிமன்றமும் வழக்கை விசாரனைக்கு எடுத்து கொள்ள உள்ளது. இந்த விஷயம் அனைத்தையும் தங்கள் அறிந்திருப்பீர்கள், அப்படி இருக்கையில், இது போன்ற கூட்டத்தை விட அவசியமானது, விடுதலை புலிகளின் மேல் உள்ள தடையை நீக்குவது, இதை தங்களுக்கு கூறும் காரணம், உங்கள் கட்சியின் சார்பாக வக்கீல் வைத்து மத்திய தீர்பாயத்தில் ஆஜராவதும். சென்னை உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ள இருக்கும் வழக்ககில் தங்கள் கட்சியும் சேர்ந்து கொள்வது அவசியமானது , இது போல் உங்களுக்கு தெரிந்த தமிழ் இயக்கங்களையும், மாணவர் இயக்கங்களையும், இதில் தனி தனியாக ஈடு படுத்த முனையுங்கள். மேலும்,புலிகளின் உறுப்பினர்கள் மட்டுமே விசாரனையில் கலந்து கொள்ள முடியும் என்று மத்திய தீர்பாயம் சொல்வதால், தமிழகத்தில் தங்கியிருக்கும் (அகதிகள் முகாம்களி்ல்) முன்னாள் விடுதலை புலிகளை பயன்ப்படு்த்தி,அவர்களுக்கு வக்கீல் வைத்து மத்திய தீர்பாயத்தில் அஜராக வையுங்கள்,சமீபத்தில் கைதாகி உள்ள விடுதலை புலிகளின் உளவு பிரிவு தமிழக பொறுப்பாளர் (பெயர் தெரியவில்லை)அவரை கூட இதில் பயன் படுத்தலாம். விடுதலை புலிகள் மீது உள்ள தடைகளை இந்தியாவில் நீக்கினால் தான், மற்ற நாடுகளிலும் தடையை நீக்க முடியும். விடுதலை புலிகள் ஜனநாயக வழியில் இயங்குவதற்க்கு கூட,அவர்கள் மீது உள்ள தடையை நீக்குவது அவசியம்.
புலிகள் நடாத்தும் ஈழப் போராட்டம் ஒன்றும் பயங்கரவாத யுத்தமில்லை
என்றும், தமிழர்கள் சுயநிர்ணய உருமைகளுக்கு உரித்துடையவர்கள் என்று
சமீபத்தில் நியூசிலாந்தின் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஈழப்போராட்டத்தை முன்னெடுக்க நியூசிலாந்தின் உச்ச நீதிமன்றத்தின்
தீர்ப்பே போதும் :