Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து தமிழ்நாடு திருவண்ணாமலையில் வெற்றிகரமாக நடந்தது விமர்சன அரங்கம்

கி.செ.துரையால் எழுதப்பட்ட புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து நூலுக்கான கல்வியியலாளர் விமர்சன அரங்கு நேற்று தமிழ்நாடு திருவண்ணாமலையில் நடைபெற்றது. மொத்தம் முப்பது பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதில் ஐவர் பெண் பேராசிரியர்களாகும். ஒரு நூல் விமர்சனத்தை கல்வியியலாளர் மட்டத்தில் இருந்து வளர்த்து மக்கள் அரங்கிற்கு கொண்டு செல்லும் முயற்சி இது என்று ஏற்பாட்டாளர் பாவல் சங்கர் வரவேற்புரையில் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பல மணி நேரம் விவாதங்களும், ஆரோக்கியமான கருத்துரைகளும் இடம் பெற்றன. இந்த நூலில் உள்ள செய்திகள் இதுவரை பத்திரிகைகளில் வராத தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. தொன்மங்களின் அடிப்படையில் உதாரணங்களை வகுத்து ஓர் உன்னதத்தைத் தேடி வாசகரை நகர்த்துகிறது.

போர் முடிந்த ஓராண்டு வெற்றிடத்தில் முதல் தடவையாக போருக்குப் பின் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதில் கூறி வெளியாகியிருக்கும் முதல் நூல் என்ற சிறப்பும் இதற்கு இருக்கிறது என்று பேராசிரியர் .நெடுஞ்செழியன் தனது உரையில் குறிப்பிட்டார். மிக வித்தியாசமான பார்வையுடைய இந்த நூல் போரின் ஒவ்வொரு நாளையும் உதாரணமாக்கி, அழுவதற்கு இது நேரமல்ல என்று மக்களுக்கு நம்பிக்கை கூறுகிறது. மேலும் கவலைகளை பேசாமல் புத்தெழுச்சி ஊட்டுவதற்காக எழுதப்பட்ட நன்னம்பிக்கை நூலாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் உள்ள வாசகருக்கு இந்நூல் கண்டிப்பாக சேர வேண்டும் என்ற கருத்து பரவலாக முன் வைக்கப்பட்டது.

அனைத்துக் கேள்விகளுக்குமான பதிலை நூலுக்கு முகவுரை எழுதியவர்களுள் ஒருவரான பாவல் வழங்கினார். அறிஞர் மட்ட உரையாடலைத் தொடர்ந்து வெளியீட்டு விழாவை முதலாவதாக சென்னையில் வைப்பதென்றும், அடுத்து நூலாசிரியருக்கு பேராதரவு வழங்கிவரும் விருதுநகர் குல்லூர்சந்தை மக்கள் மன்றில் நடாத்துவதென்றும், அதேபோல திருவண்ணாமலையில் மக்கள் அரங்காக மறுபடியும் நடாத்துவதெனவும் நேற்றைய பேராசிரியர்கள் அரங்கம் முடிவு செய்தது. டென்மார்க்கில் மிகவும் வித்தியாசமான வெளியீடு நடைபெறவுள்ளது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to புதுமாத்தளன் சோகங்களுக்கு புதுமருந்து போருக்குப் பின் வந்துள்ள முதல் முயற்சி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com