விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து விவாதிக்க சென்னையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு தடையை நீடித்து வருகிறது.
கடந்த மே மாதம் 14ம் தேதி விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
விடுதலை புலிகள் அமைப்பு இலங்கையில் ஒழிக்கப்பட்டுவிட்டதால் தடையை நீட்டிக்க தேவையில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து மேற்கொண்டு ஆலோசனை நடத்துவதற்காக சென்னையில் மத்திய அரசின் சார்பில் கூட்டம் நடைபெறுகிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் தமிழர் அமைப்புகள் கலந்துகொண்டுள்ள இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அவரவர் தங்கள் கருத்துக்களை கூறிவருகின்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பொலிஸார், கடந்த ஆண்டுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.




0 Responses to விடுதலைப்புலிகள் இயக்க தடை விவகாரம்: சென்னை ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ,நெடுமாறன்!