Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இஸ்லாமிய போராளிகளின் முக்கிய தளமாக இலங்கை விளங்குவதாகவும், இது தமது நாட்டின் பாதுகாப்புக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என இந்தியா அச்சம் கொண்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாமிய போராளிகள் இலங்கையை தளமாக கொண்டுள்ளமைக்கும், இலங்கை அண்மைக்காலமாக ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவுகள் குறித்தும் இந்திய புலனாய்வுத்துறை ஆராய்வதாக ஸ்ரீலங்கன் கார்டியன் தெரிவித்துள்ளது.

இலங்கையை பொறுத்தவரை இந்தியாவுடன் அது நட்பு நாடாக விளங்குகிறது

எனினும் இலங்கையின் கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களை பாகிஸ்தானிய போராளிகளின் பயிற்சி தளங்களாக பயன்படுத்த இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவானரோநம்புகிறது

இது நிரூபிக்கப்படுமானால், அதன் மூலம் இந்தியா, இலங்கையை தமது எதிரி நாடாக பார்க்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to இலங்கையும், இந்தியாவும் எதிரி நாடுகளாகுமா?: ஸ்ரீலங்கன் கார்டியன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com