குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் என்னிடம் குடும்பத்தையே அழித்து விடுவேன் என்று பயமுறுத்தி பாலியல் வல்லுறவு புரிந்ததாக கிளிநொச்சியைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியொருவர் யாழ். நீதிமன்றத்தில் நிகழ்ச்சித்திட்ட உதவியாளரிடம் மேற்கண்டவாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:
யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 திகதி 20 வயதுடைய திருமணமாகாத யுவதி யொருவர் பெண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்.
அந்தக் குழந்தையை வளர்க்க தனக்கு விருப்பமில்லையென்றும் அதனைச் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்க விரும்புவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலைக்கும் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்துக்கும் அப்பெண் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.
இந்தக் கடிதம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா குறித்த பெண்ணிடமிருந்து வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு நிகழ்ச்சித்திட்ட உதவியாளரிடம் உத்தரவிட்டார்.
அந்தப் பெண்மணி நிகழ்ச்சித் திட்ட உதவியாளரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்த விடயங்கள் வருமாறு:
வவுனியா அருணாச்சலம் முகாமில் தங்கியிருந்த போது இராணுவத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறும் இல்லையெனில் எனது குடும்பத்தையே அழித்து விடுவேன் எனவும் என்னைப் பயமுறுத்தினார்.
புலனாய்வாளரின் மிரட்டலுக்கு அஞ்சி அடிபணிந்ததால் நான் ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டிய நிலை ஏற்பட்டது. எனது குழந்தையை பதுளையில் உள்ள மாமியார் வீட்டில் வளர்க்க எண்ணியுள்ளேன் என்று அந்தப் பெண் வாக்குமூலம் அளித்தார்.
வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் நீதிவான் நீதிமன்றத்தில் அதனைச் சமர்ப்பித்தார்.
இதன் பின்னர் குழந்தையை அழைத்துச் செல்ல நீதிமன்ற நீதிவான் அனுமதியளித்தார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to உனது குடும்பத்தையே அழிப்பேன் இராணுவ வீரர் பாலியல் வல்லுறவு: வவுனியா முகாம்