Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டைப் பார்வையிட வரும் தென்னிலங்கை மக்கள் அங்கிருந்து மண் எடுத்துச் செல்வதாக வல்வெட்டித்துறை மக்கள் தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் யாழ்ப்பாணத்துக்கு தென்னிலங்கையிலிருந்து வருகை தருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தலைவர் பிரபாகரனின் இல்லத்தைச் சென்று பார்வையிடுகிறார்கள்.

உடைக்கப்பட்ட நிலையில் காணப்படும் அந்த வீட்டைப் பார்வையிடும் அவர்கள் அங்கிருந்து மண் எடுத்துச் செல்கின்றனர். இதனை வல்வெட்டித்துறை வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி கே.மயிலேறும்பெருமாள் உறுதிப்படுத்தினார்.

தலைவர் பிரபாகரனின் வீட்டைப் பார்வையிட ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என அங்கு முகாமிட்டிருக்கும் இராணுவத்தினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தேசியத் தலைவரின் வீட்டில் இருந்து மண் எடுக்கும் தென் பகுதி மக்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com