தமது கணவர் தொடர்ந்தும் சிறைவைக்கப்பட்டால் தாம் அவரின் பெயரில் அரசியலை முன்னெடுக்கப்போவதாக சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.போர் வெற்றிக்கு சொந்தக்காரரை அரசாங்கம் பழிவாங்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தாம் அரசியலை வெறுத்த போதும், தமது கணவர் நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும். ஊழல்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருந்தமைக்காகவே அவரின் அரசியலுக்கு ஒப்புதல் வழங்கியதாக அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அரசியலில் தமக்கு எதிராக போட்டியிட்டமைக்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமது கணவரை பழிவாங்குவதாக குறிப்பிட்டுள்ள அனோமா பொன்சேகா அவர் போர் வீரர் மட்டும் அல்ல அரசியலிலும் வீரரே என தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை தமது கையில் கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமது கணவரின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரை சிறையில் அடைத்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாளன்று இரவு தொடர்பாக தம்மிடம் முதலில் கூறுவதற்கு தமது கணவர் சங்கடப்பட்டதாக குறிப்பிட்ட அனோமா பொன்சேகா, பின்னர் சரத் பொன்கேசா தம்மை சமாளித்துக் கொண்டதாக தெரிவித்தார்.
போரின் போது தாம் மரத்தின் கீழ் உறங்கியமையை நினைவுப்படுத்திய அவர் நாட்டுக்காக தாம் உயரிய அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டதாக அனோமா தெரிவித்துள்ளார்.
தமது கணவர் தவறு எதனையும் செய்திருந்தால் மன்னிப்பு கோரலாம். ஆனால் அவர் எந்த தவறையும் செய்யவில்லை இந்தநிலையில் ஏன் அவர் மன்னிப்பு கோரவேண்டும் என மனோ கேள்வி எழுப்பினார்.
வெளிநாடு செல்லுமாறும் நாடு திரும்பக்கூடாது என்றும் தெரிவித்து சரத் பொன்சேகாவை விடுதலை செய்தால், அதனை ஏற்றுக்கொள்வீர்களா? என அனோமா பொன்சேகாவிடம் கேட்டபோது, தமது கணவர் நாட்டின் மீது அன்பு கொண்டவர் என்றும் மகள்மாரையும் படித்து முடித்த பின்னர் நாடு திரும்பி மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்றும் கேட்டுள்ளதாக அனோமா குறிப்பிட்டுள்ளார்.
தமது கணவரை விடுதலை செய்யுமாறு ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியமை தொடர்பில் கருத்துரைத்த அனோமா, இது தொடர்பில் கடிதம் அனுப்பும் முன்னர் ரணில் விக்கிரமசிங்க தமது கணவருடன் கலந்துரையாடவில்லை எனக்குறிப்பிட்டார்.
அத்துடன் யார் வேண்டுமானாலும் தமது கணவருக்காக கோரிக்கை விடுக்கலாம் என அனோமா தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகாவை பயன்படுத்தி அரசியல் செய்ய முற்படுவதாக வெளியான குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்துரைத்த அவர் அரசியலை புரிந்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.



0 Responses to கணவரின் பெயரில் அரசியலை முன்னெடுக்க தயார்: அனோமா