Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்டபாடங்களுக்கான மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அவர் மேற்கொண்ட போரையும் போர்க் குற்றங்களுக்கான பொறுப்பையும் மூடி மறைப்பதற்கான ஒரு நடவடிக்கையென சர்வதேச ஜூரிகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் மிகக் கொடூரமான அவசரகால விதிகள் மற்றும் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கானவர்கள் தடுப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையங்கள் துன்புறுத்தல்களுக்கும் பலவந்தமாக குற்றச் செயல்களை ஒப்புக்கொள்ளச் செய்வதற்கும் பிரபலமானவை எனவும் சர்வதேச ஜூரிகள் சபை இலங்கையை குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த மாதப் பிற்பகுதியில் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் நியாயமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு சர்வதேச ஜுரிகள் சபை கண்டனம் தெரிவிக்கிறது.

இராணுவத்தினடம் நேரடியாக சரணடைந்தவர்களும்விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள்' என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் இரகசிய சிறைச்சாலைகளுக்கு மேலதிக விசாரணைக்கும் மற்றும் புனர்வாழ்வு என்ற அடிப்படையிலுமே கொண்டு செல்லப்பட்டனர்.

நாட்டின் மிகக் கொடூரமான அவசரகால விதி கள் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கானோர் ஒரு வருடத்திற்கு மேலாக குற்றச்சாட்டுக்களோ அல்லது விசாரணைகளோ எதுவுமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய தடுப்பு நிலையங்கள் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள பலவந்தப்படுத்தித் துன்புறுத்துவதற்கு பிரபலமானவை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சட்ட ரீதியான சிறைப்படுத்தலுக்கு அப்பால், விடுதலைப் புலிகளுக்கான இலங்கையின் மிகப் பெரும் தடுப்பு முகாம் என்ற தலைப்பில் அவதானத்துடன் எழுதப்பட்டுள்ள இவ்விடயம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கைக் கொண்டதாகும்.

இருப்பினும்சரணடைந்தவர்கள்' மற்றும்புனர்வாழ்வளிக்கப்படுபவர்கள்' மீதான மனித உரிமை மீறல் துஷ்பிரயோகம் சர்வதேச சட்டத்தின் அடிப்படை மீறலாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிச்சயமான எண்ணிக்கை தெரியவில்லை. அது குறித்த இலங்கை புனர்வாழ்வு ஆணையாளரின் தகவல் தெளிவற்றதாகவும் ரண்பாடானதாகவும் உள் ளதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ளோன் உண்மை யான நிலைமை என்னவென்று தெயவில்லை.

சிலவேளை அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்களா என்பதை தெளிவுபடுத்த முடியாதுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச ஜுரிகள் சபைக்கும் தடுப்பு முகாம்களுக்குச் செல்ல அனுமதியில்லை. அவர்கள் குவித்து வைக்கப்பட்டு சுகாதாரமற்ற ஒரு நிலையிலேயே இருப்பதாக தெரிய வருகிறது.

சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை இலங்கைக்குப் பொருத்திப் பார்க்கிறபோது இலங்கை மனித உரிமைகளை மீறி வருவது புலனாகிறதென்றும் அது வாதிக்கிறது.

சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளையும் பதிலளிக்கும் கடப்பாட்டையும் இலங்கை முற்றாகப் புறக்கணிப்பதாவும் அது குற்றஞ்சாட்டுகிறது.

தடுத்து வைப்பு அல்லது சுதந்திரமான நடமாட்டத்திற்கான தடை சர்வதேச சட்டத்தின் அடிப்படை விதிகளை மீறுவது அது மனிதாபிமானத்திற்கெதிரான பெருங் குற்றமாகக் கருதப்படுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை மேற்கோள்காட்டி அது சுட்டிக்காட்டுகிறது.

இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் அடிப்படை ஜனநாயக உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதை சுட்டிக் காட்டியுள்ள சர்வதேச ஜுரிகள்சபை ஜனாதிபதி ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழு அவர் மேற்கொண்ட போரையும் போர்க் குற்றங்களுக்கான பொறுப்பையும் மூடி மறைப்பதற்கான ஒரு நடவடிக்கையெனவும் குறிப்பிடுகிறது.

0 Responses to நல்லிணக்க ஆணைக்குழு போர்க் குற்றங்களை மூடி மறைக்கும் நடவடிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com