Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தக் கல்வியாண்டிற்கான அங்கத்தவர் அட்டை மற்றும் மேல் ஆடை ஆகியவற்றை வெளியிடுவதில் UTSC TSA இன் நிர்வாக அவை மற்றும் இயக்குனர் குழுமம் ஆகியன மகிழ்வுகொள்கின்றன. தமிழ் அடையாளத்தின் அங்கங்களான தமிழ்மொழி, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றைப் பாதுகாப்பதில் UTSC TSA நம்பிக்கை கொண்டுள்ளது.

தன்னிகரில்லா தலைவரின்கீழ் தமிழ் அடையாளம், மொழி, மற்றும் கலாச்சாரம் ஆகியவை தமிழுலகம் முழுவதும் வளர்ச்சிகண்டுள்ளன. இந்த தமிழ் அடையாளத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதில் தலைவரின் வளமான உத்வேகம் அளிக்கும் வார்த்தைகள் அடிப்படைத்தேவையானவை என்பதை UTSC TSA உணர்ந்துள்ளது. கீழுள்ள தலைவரின் மேற்கோள் 2010-2011 UTSC TSA அங்கத்தவர் அட்டைகளில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது:

“எமது நாட்டின் கட்டமைப்பை தாங்கும் தூண்களாக கல்வி, மொழி, கலாச்சாரம் மற்றும் நிலம் ஆகியவை விளங்குகின்றன.” – தமிழீழ தேசிய தலைவர்

இந்த தேசியத்தலைவரின் சிந்தனையானது, எமது தாய்நாடு தமிழீழத்தின் பலமான கட்டமைப்புக்குத் தேவையான நான்கு அடிப்படையான காரணிகளை எடுத்துக்காட்டுகின்றது.

இந்த ஆண்டின் அங்கத்தவர் அட்டைகளோடு, UTSC TSA ஆனது, கனடாத்தமிழ் இளைஞர்களின் சிறப்புரிமைகளை வேறுபடுத்தி அடையாளம் காணவேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. நீலநிற மேல் ஆடை முன்புறத்தில் UTSC TSA என்பதோடு சேர்த்து கனடா வரைபடமும்எமது வீடுஎன்ற வாசகமும் அதேவேளை மேல் ஆடை பின்புறத்தில் தமிழீழ வரைபடத்தோடு கூடியஎமது நாடுஎன்ற வாசகமும் சித்தரிக்கபட்டுள்ளது. இந்த ஆண்டின் டீ-சேர்ட்டானது கனடா தமிழ் இளைஞர்களின் தனித்தன்மைக்கு பங்களிக்கும் இரு நாடுகளையும் வெளிப்படுத்திநிற்கின்றது. கனடாத்தமிழ் இளைஞர்களின் வல்லமைகளையும் மனங்களையும் உருவமைப்பதில் கனடா மற்றும் தமிழீழம் ஆகிய இரு நாடுகளும் பெரும்பங்காற்றுகின்றன. எனவே இரு நாடுகளையும் பாராட்டிப்போற்றல் அத்தியாவசியமானது.

சாரமாக, தனது உறுப்பினர்களுக்கு, வளம்பொருந்திய தமிழ்மொழி, கலாச்சாரம், மற்றும் வரலாறு ஆகியவற்றை கற்பிக்கும் கடமையை UTSC TSA எடுத்துக்கொண்டுள்ளது. அத்தோடு தமிழீழத் தேசியத் தலைவரின் வார்த்தைகளை மனதில் நிறுத்தி, எதிர்வரும் வருடங்களின் முன்னேற்றத்துக்காக விடாமுயற்சியுடன் செயல்படும் என்று UTSC TSA உறுதிபூணுகின்றது.




0 Responses to டொரோண்டோ பல்கலைகழகத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய அடையாளங்களை முதன்மை படுத்தும் ஆரம்ப நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com