கொக்குளாய் கடற்பரப்பில் கடற்படையினரின் டோறா கடற்கலங்கள் கடற்புலிகளால் வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்தவேளை டோறா கலங்களை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டிருந்த இரு கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதினால் ஏற்பட்ட விபத்தில் லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல் புவனேஸ், மேஜர் கலைமகள், மேஜர் சூரியப்பிரபா, மேஜர் பரணி, கப்டன் சுதாகரன் ஆகிய கடற்கரும்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற மோதலின்போது கடற்படையின் நான்கு டோறா படகுகள் கடற்புலிகளால் சேதமாகக்கப்பட்டன. இதன்போது கடற்புலி மேஜர் துவாகரன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
இம் மாவீரர்களுக்கு VanniOnline தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றது.








மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to கொக்குளாய் கடற்பரப்பில் வீரகாவியமான கடற்கரும்புலிகளின் நினைவு நாள்