Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில் ராஜபக்சே பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து கோவை காந்திபுரத்தில் .தி.மு.., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.

இந்த ஆர்ப்பாட்டம் கோவை மாநகர மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை ஆரிய வைத்திய பார்மசியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென கலந்து கொண்டார்.

அப்போது பேசிய வைகோ, எனது உடல்நிலையை காரணம் காட்டி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என வலியுறுத்தினார்கள். அதையும் மீறி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்துள்ளேன். ராஜபக்சேவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் எனது குரலை பதிவு செய்ய ஓடி வந்தேன்.

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோது, இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தானில் இந்தியர்கள் தாக்கப்பட்டபோது பிரணாப் முகர்ஜி கொந்தளித்தார். ஆந்திரா, கேரள மக்கள் தாக்கப்பட்டால், இந்திய அரசு பெரும் குரல் கொடுத்து பேசுகிறது.

ஆனால் இலங்கையில் தமிழன் தாக்கப்பட்டபோது, பிரதமர் உட்பட அனைவரும் வாய்மூடிதான் இருந்தார்கள். ஆயுத பலம், படை பலம் போன்றவற்றை கொடுத்து போர் செய்ய சொன்ன சோனியா காந்தி, ராஜபக்சேவை வரவழைத்து பரிவட்டம் கட்டி அழகு பார்த்தார்.

71 நாடுகள் கலந்து கொள்ளும் காமன்வெல்த் போட்டிக்கு வரவழைத்து, இப்போது உபசரிக்க பார்க்கிறார். இதையெல்லாம் முதல்வர் கருணாநிதியின் அரசு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

தடை செய்யப்பட்ட குண்டுகளை, வீசி போர் செய்த ராஜபக்சேவுக்கு, தமிழினத்தை கொன்ற ராஜபக்சேவுக்கு மேலும் அழகுபடுத்தி பார்க்கிறார்கள். தயவு செய்து ஒன்றே ஒன்றை மட்டும் குறித்துக் கொள்ளுங்கள். இதே நிலைமை நீடித்தால் தமிழகம் காஷ்மீராக மாறுவதை யாரும் தடுக்க முடியாது என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோவை, பொலிஸார் கைது செய்து கோவையில் உள்ள பாலகிருஷ்ணா திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

ராஜபக்சேவை அனுமதிக்கக் கூடாது! : சென்னை மதிமுக ஆர்ப்பாட்டத்தில் மல்லை சத்யா

மன்னிக்க முடியாத குற்றவாளி ராஜபக்சேவை இந்தியாவுக்கு அனுமதிக்கக் கூடாது என, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா பேசினார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து .தி.மு.. சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து பேசிய மல்லை சத்யா,

காமன்வெல்த் தொடக்க விழாவில் இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸை அழைத்து இந்திய அரசு கௌரவப்படுத்தியது. தற்போது நிறைவு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்துள்ளது.

இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்ததற்காக சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர் ராஜபக்சே. ஆனால், அவரை டெல்லியில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவுக்கு அழைத்து கெளரவப்படுத்துவது, தமிழர்களுக்கு எதிரான செயல். இந்த எதிர்ப்பு தொடர்ந்து வைகோ தலைமையில நடைபெறும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட்டது. கொடும்பாவியை எரித்தவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: வைகோ கைது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com