Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பு வெளிச்சவீடு வாவியில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிப் பலியான இரு தமிழ் இளைஞர்களில் தேடப்பட்டுவந்த மற்றய இளைஞனின் சடலம் பாலமீன்மடு வாவிக்குடாப் பகுதியிலிருந்து இன்று மதியம் கண்டெடுக்கப்பட்டது.

19 வயதுடைய சிங்கராஜா ஜோபின் என்ற இளைஞரது சடலமே இன்று காலை மீட்கப்படுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சடலத்தை மட்டக்களப்பு பொலிஸார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

நேற்று காலை இவ்வாவியில் நீராடிக்கொண்டிருந்த 5 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி பலியாகினர்.

இவர்களில் ஒருவரது சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது.சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தென்தமிழ் ஈழம் மட்டக்களப்பில் குளிக்கச்சென்ற இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com