இதுபற்றி தெரியவருவதாவது:
கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் நின்று தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறீ.ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் மது அருந்திவிட்டு கடலில் குளித்துள்ளனர்.
அப்போது இவர்கள் ஆறுபேரும் கடல் அலையினால் இழுத்துச்செல்லப்பட்டு சுழியில் அகபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அவ்விடத்திற்கு விரைந்த கடற்படையினர் 04 மாணவர்களை மட்டும் ஆபத்தான நிலையில் உயிருடன் மீட்டுள்ளனர். மற்றைய இருவரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
மூன்றாம் வருட மாணவரான யாழ்ப்பாணம், கோப்பாயை சேந்த நரசுதன், இரண்டாம் வருட மாணவனான வவுனியா தாண்டிகுளத்தைச் சேந்த அன்புதாசன் ஆகியோரே இறந்த மாணவர்களாவர்.
இவர்களின் உறவினர்கள் உடனடியாக பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.



0 Responses to கடலில் நீராடிய பல்கலைகழக தமிழ் மாணவர்கள் இருவர் பரிதாப மரணம்