Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்ற செப்டம்பர் 29 - அக்டோபர் 1 திகதிகளில் நியூயோர்க் நகரில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாம் அமர்வில் நடைபெற்ற நிகழ்சிகளை சில இணையத்தளங்கள் உண்மைக்குப் புறம்பான வகையில் செய்திகளை வெளியிட்டு வந்ததை பலரும் எமது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். உண்மை நிலையைத் தெளிவுபடுத்தும் முகமாக இவ் அறிக்கையைப் பிரசுரிக்கின்றோம்.

29 செப்டம்பர் 2010 கணக்கின்படி நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவையின் மொத்த உறுப்பினர் தொகை 97 பேர் மாத்திரமே. (சில இணையத்தளங்கள் உண்மைக்கு புறம்பான வகையில் வெளியிட்டது போல் 115 பேர் அல்ல. மிகுதி 18 உறுப்பினர்-தேர்தல் தொகுதிகளில், சிலவற்றிலே உள்நாட்டு நிலைமை காரணமாக தேர்தல் நடத்த முடியவில்லை, மேலும் சிலவற்றிலே வாக்களிப்பு முறைகேடு பற்றி விசாரணைகள் நடைபெறுகின்றது. அவுஸ்திரேலியா NSW மாநில முடிவுகள் உத்தியோகபூர்வமாக அவுஸ்திரேலியா தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படாததாலும் சத்தியப் பிரமாணம் எடுக்காத படியாலும் அவர்கள் 4 பேரும் வாக்களிக்கும் தகுதி பெற்றிருக்கவில்லை).

இறுதி நாள் அமர்வில் நேரில் கலந்து கொண்ட உறுப்பினர் தொகை 74 (நியூயோர்க் இல் 47 பேர், பாரிஸ் இல் 17 பேர், லண்டன் இல் 10 பேர்) ஆகும். 23 பேர்களால் மேல் குறிப்பிட மூன்று அரங்கிலும் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை. இவர்களில் 11 பேர் அனுமதி அளிக்கப்பட்ட பதிலி (proxy)p வாக்களிப்பு மூலம் பங்கு கொண்டனர். எனவே மூன்றாம் நாள் அமர்வில் மொத்தமாக 85 பேர் வாக்களிக்கும் தகுதி பெற்று இருந்தனர்.

நாடு கடந்த தமிழீழ அரசின் யாப்பு விவாதிக்கப்பட்டு, திருத்தங்கள் செய்யப்பட்டு, வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது எதுவித எதிர்ப்புமின்றி இவர்கள் 85 பேரும் (100 சதவீதமானவர்களும்) யாப்பை ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். (உண்மைக்குப் புறம்பான வகையில் சில இணையத்தளங்கள் வெளியிட்டது போல் ஒருவரும் இந்த வாக்கெடுப்பில் வெளிநடப்புச் செய்யவில்லை. அங்கு இருந்தோர் 48 பேர் என்பதும் பிழையான கணக்கு ஆகும்).

இதன் பின் சில உறுப்பினர்கள் தாம் கொண்டுவந்த தகுதியற்ற சில பதிலிகளின் வாக்குகளைப் பாவிக்க அவைத் தலைவர் அனுமதி அளிக்க மறுத்ததைக் காரணம் காட்டியும் அரசவைக்கு வெளியில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுக்கூறியும் 12 பேர் நியூயோர்க் அரசவை மண்டபத்தை விட்டு வெளியேற லண்டனில் 4 பேரும், பாரிஸில் மேலும் 4 பேருமாக மொத்தமாக 20 பேர் வெளிநடப்பு செய்தனர். இவர்களிடம் இருந்த அனுமதி உள்ள பதிலிகள் 6. வெளிநடப்பு செய்தவர்கள் (20 + 6 பதிலிகள்) போக மூன்று அரசவை மண்டபங்களிலும் மிகுதி 59 உறுப்பினர்கள் தொடர்ந்தும் இருந்தனர். (சில இணையத்தளங்கள் வெளியிட்டதுபோல் மிகுதியாக இருந்தோர் 48 பேர் என்பது பிழையான கணக்கு ஆகும்).

பின்னர் சபாநாயகருக்கும் உப-சபாநாயகருக்கும் தேர்தல் நடைபெற்றபோது எதுவித எதிர்ப்புமின்றி மூன்று அவைகளிலும் இருந்த 59 பேரும் (100 சத வீதமானவர்களும்) திரு பொன் பாலராஜன் அவர்களை சபாநாயகராகவும் செல்வி சுகன்யா புத்திரசிங்கம் அவர்களை உப-சபாநாயகராகவும் ஏகமனதாகத் தெரிவு செய்தனர்.

இதன் பின்னர் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் தெரிவு வாக்கெடுப்பிற்கு விடப்பட்போது எதுவித எதிர்ப்புமின்றி மூன்று அவைகளிலும் இருந்த 59 பேரும் (100 சதவீதமானவர்களும்) திரு உருத்திரகுமாரன் அவர்களை ஏகமனதாக பிரதமராகத் தெரிவு செய்தனர். இத்தெரிவு பாராளுமன்றத்தில் இருந்தோரில் 100 சதவீதமானவர்களின் தெரிவாகும்.

வெளிநடப்பு செய்தோரையும் சேர்த்து (11 பதிலிகளை விட்டு) கணக்குப் பார்த்தால் இது 73 சதவீதமாகும் (=100 x 54/74). பதிலிகளையும் வெளிநடப்பு செய்தோரையும் கூட சேர்த்துக் கணக்குப் பார்த்தால் இது 69.4 (=100x 59/85) சதவீதமானவர்களின் தெரிவாகும். இது வழமையாகத் தேவையான 2/3 பெரும்பான்மையை (66.7 சதவீதத்தை) விட அதிகமானதாகும்.

இனியாவது நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி உண்மைக்குப் புறம்பான வகையில் செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் உத்தியோகபூர்வமான செயலகத்தைத் தொடர்பு கொண்டு நேர்மையான செய்திகளை வெளியிடும் என எதிர்பார்க்கின்றோம்.

செயலகம்,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to இரண்டாம் அமர்வின் இறுதி நாளில் நடந்தது என்ன? நாடு கடந்த தமிழீழ அரசு விளக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com