Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் போர் முடிவடைந்து மக்கள் முழுமையாக மீள் குடியேற முன்பாக வடக்கு மாவட்டங்களில் வாக்களார் பதிவுகளை மேற்கொண்ட அரசாங்கத்தின் நடவடிக்கையானது தமிழ் மக்களுக்கு பாதகமான ஒன்று என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

இலங்கையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில், இலங்கை தேர்தல் திணைக்களம் போர் முடிந்த பின்னர் வாக்காளர் பதிவுகளை நடத்தியுள்ளமை குறித்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த வாக்காளர் பதிவுகளின் போது வடக்கு மாவட்டங்களில் வாக்காளர் எண்ணிக்கை 40 வீதத்தால் குறைந்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறியிருந்தார்கள்.

இதனால், நாடாளுமன்றத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

போர் முடிந்த போதிலும் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து சென்ற மக்கள் இன்னமும் நாடு திரும்பவில்லை, பலர் மேற்கத்தைய நாடுகளுக்கு சென்றிருக்கின்ற போதிலும் அவர்களும் நாடு திரும்புவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பிரேமச்சந்திரன் அவர்கள், ஆனால், அதற்கான கால அவகாசம் எதுவும் வழங்கப்படாமல், அரசாங்கம் இந்த வாக்காளர் பதிவை அவசர அவசரமாகச் செய்வது தவறு என்றும் கூறுகிறார்.

இது குறித்து இலங்கை ஜனாதிபதியிடமும், ஏனைய பல தரப்பினரிடமும் கூட தாம் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 Responses to வாக்காளர் பதிவு தமிழர்களுக்கு பாதகமானது: சுரேஸ் பிரேமச்சந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com