நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு முத்துகுமாரின் படத்தை திறந்து வைத்து பேசினார்.
அவர் பேசியதாவது:
ஒருவர் இறந்துவிட்டால் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாது என்று சொல்வது வழக்கம். ஆனால் முத்துகுமாரின் இழப்பை ஈடு செய்ய கூடியதுதான். அவரது தியாகத்தை போற்றும் வகையில் தமிழகத்தில் 1 லட்சம் முத்துகுமார் உருவாக வேண்டும். அவ்வாறு உருவானால் அவரது இழப்பு ஈடு செய்ய கூடிய இழப்பாக இருக்கும்.
கடந்த ஆண்டு முத்துகுமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினேன். இந்த ஆண்டு சூட்டிங் இருந்ததால் இங்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளேன். தமிழன் எங்கு இருந்தாலும் அஞ்சலி செலுத்துவதை கடமையாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



ஆமாம் அப்பொது தானே உங்கள் அசிங்க அரசியல் வியாதிகளுக்கு அந்த தியாக உள்ளம் படைத்த உணர்வாளர்களின் உடலங்களின் மேலமருந்து அரசியல் வியாபாரம் நடத்தலாம். சத்தியராஜ் அவர்களின் தமிழின உணர்வை மதிக்கின்றேன். ஆயினும் இனியும் தமி்ழ் உணர்வாளர்களை ஈழத்து தமிழரின் நிலை கண்டு வருந்துபவர்களின் மரணத்தை ஊக்குவிக்காதீர்கள். உயிருடனிருந்து இதற்கு மேலும் செய்முடியும் அந்த தியாக உள்ளம் படைத்தவர்களுக்கு.