Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யோர்க் பல்கலைக்கழக மாணவர்கள் ஆண்டுதோறும் நடாத்திவரும் பல்கலாச்சார வார நிகழ்வுகளின் இந்த ஆண்டுக்கான நிகழ்வு தை மாதம் 24 ம் நாள்முதல் 28 ம் நாள்வரை பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது.

இதில் 55 க்கும் மேற்பட்ட நாடுகளின் மாணவர் அமைப்புகள் கலந்துகொண்டு தமது நாடுகளின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் யோர்க் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் அமைப்பும் கலந்துகொண்டு தமிழீழத்தின் அடையாளங்களையும் தமிழ் மக்களின் கலாச்சாரம் பாரம்பரியம் போன்றவற்றை முன்னிறுத்தியும் நிகழ்வுகளை முன்னெடுத்தது.

பல்லாயிரக்கணக்கான வேற்றினத்து மாணவர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுகளில் எமது தேசிய அடையாளங்களை முன்னிறுத்தியது எமது அடையாளங்களை வெளிகொணர்வதோடு மட்டுமல்லாமல் புலம்பெயர் மண்ணில் தமிழீழத்துக்கான ஒரு ஆதரவு தளத்தை உருவாக்கும் முயற்சியாகவும் அமைந்தது. மிகவும் நேர்த்தியாக ஒழுங்குசெய்யப்பட்ட இந்த நிகழ்வின் வேறுபல கலாச்சார அம்சங்களும் இடம்பெற்றன.

குறிப்பாக எமது பாரம்பரிய உணவு வகைகள் அங்கு வந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்ற இந்த நிகழ்வானது மற்றைய தமிழ் மாணவர் அமைப்புகளுக்கும் முன்மாதிரியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

TYO Media – Canada





0 Responses to யோர்க் பல்கலைக்கழக தமிழீழ மாணவர்களின் பல்கலாச்சார நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com