Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நான் ஒரு போதும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதில்லை என்று முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

அமெ ரிக்காவின் போர்மிங்டன் பிரதேசத்தில் கத்தோலிக்க தேவாலயமொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நான் எந்தவிதமான போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டதில்லை. நான் அவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் என்றைக்காவது அது வெளிவரத்தான் செய்யும்.

நான் மட்டுமல்ல.. எந்தவொரு இராணுவ வீரனாயினும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்தால், இராணுவம் அது தொடர்பில் பாராமுகமாக இருக்காது. இராணுவ சட்டத்தின் பிரகாரம் கடும் தண்டனை வழங்கவே செய்யும்.

தான் குற்றமற்றவன் என்பதன் காரணமாகவே 2009ல் தன்னை இலக்கு வைத்து வெடிக்க வைக்கப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலிலிருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அது மட்டுமன்றி இறுதிக்கட்ட போரின் போது யாராவது சிவிலியன்கள் உயிரிழந்திருந்தால், அது விடுதலைப் புலிகளின் பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தும் முயற்சியிலிருந்து தப்பி வருவதற்கான எத்தனத்தின் போது விடுதலைப் புலிகளின் துப்பாக்கிக்கு இரையாகியே கொல்லப்பட்டிருப்பார்களே தவிர இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகங்களால் அல்ல என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to போர்க்குற்றங்களில் நான் ஈடுபட்டதில்லை: ஷவேந்திரசில்வா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com