Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எந்தக் குழப்பமும் இல்லை.தலைமைத்துவப் போட்டியும் இல்லை. உள்ளூராட்சித் தேர்தல் சமயத்தில் கூட்டணிக்குள் குழப்பம் எனத் தெரிவித்து அரசியல் இலாபம் பெற சில சக்திகள் முனைகின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் தலைமைத்துவப் போட்டி உக்கிரமடைந்துள்ளது என்றும் அரச ஊடகங்களில் செய்தி வெளியாகியிருப்பது குறித்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச் சந்திரன் ஆகியோரிடம் கேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

வடக்கு கிழக்கில் மக்களின் ஆதரவை இழந்து வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சில அரசியல் சக்திகள் இம்மாதிரியான வதந்திகளை அரச ஊடகங்கள் மூலம் பரப்பி வருகின்றன. உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறும் இச்சந்தர்ப்பத்தில் கூட்டமைப்புக்குள் குழப்பம் என மக்களைக் குழப்பி உள்ளூராட்சி சபைகளில் ஒருசில ஆசனங்களையாவது பெற இச்சக்திகள் முனைகின்றன என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சித் தேர்தல்களுக்காக கூட்டமைப்பு ஒற்றுமையுடன் பிரசாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது எனவும் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

0 Responses to தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம்: சேனாதிராஜா, பிரேமச்சந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com