சிறையிலடைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவுக்கு சிறைச்சாலையில் குளிப்பதற்கு வெந்நீர் வசதி வழங்குமாறு கொழும்பு நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.பொன்சேகாவின் சுகவீன நிலையைக் கருத்திற் கொண்டு அவருக்கு குளிப்பதற்கு வெந்நீர் வசதி செய்து கொடுக்குமாறு சிறைச்சாலை வைத்திய அதிகாரி சிபார்சு செய்திருந்ததார். ஆயினும் இதுவரை அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
அந்நிலையில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய சிப்பாய்களை கடந்த ஜனாதிபதித் தோ்தலின் போது சேவையில் வைத்துக் கொண்டிருந்தமை தொடர்பான வழக்கில் இன்று சரத் பொன்சேகாவும் அவரது செயலாளர் முன்னாள் இராணுவ கப்டன் சேனக சில்வாவும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.
அதன் போது பொன்சேகாவின் வழக்கறிஞர் வெந்நீர் வசதி செய்து கொடுக்காத விடயத்தை நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அதையடுத்து சிறைச்சாலை அதிகாரியை கடுமையாக கடுமையாக கடிந்து கொண்ட நீதவான், வைத்திய அதிகாரி சிபார்சு செய்திருக்கும் பட்சத்தில் வெந்நீர் வசதி செய்து கொடுக்காதது ஏன் என்று கேள்வியெழுப்பினார்.
அத்துடன் உடனடியாக பொன்சேகாவிற்கு சிறைச்சாலையில் குளிப்பதற்கு வெந்நீர் வசதி செய்து கொடுக்குமாறும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் பொன்சேகாவின் செயலாளருக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. வழக்கு எதிர்வரும் மே மாதம் 03ம் திகதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.



0 Responses to பொன்சேகா குளிப்பதற்கு வெந்நீர் வழங்கவும்