அவர்கள் தொடுத்த பல கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிய இமெல்டா சுகுமார், கடைசியா அவர்கள் கேட்ட கேள்விக்கு நான் அரசியல்வாதி அல்ல ஒரு அரசாங்க உத்தியோகத்தர் எனப் பதிலளித்துள்ளாரம். யாழ் நிலைகுறித்தும், திருடர்கள் பெருகிவருவது குறித்தும், இராணுவ நடமாட்டம் குறித்தும் பலவகையான கருத்துக்களைத் தெரிவித்துவரும் இவர் ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவிடம் இது குறித்து ஏதும் சொல்லாமல், தான் அரசியல்வாதி இல்லை எனக் கூறி தப்பித்துள்ளார். யாழ் நிலமைகளை ஒரு அரசியல்வாதி தான் தெரிவிக்கவேண்டும் என்ற நிலை இலங்கையில் இல்லை. ஒரு அரசாங்க அதிபர் என்ற வகையில் அவருக்கு அந்தத் தார்மீகப் பொறுப்பு இருக்கிறது.
ஆனால் அவர் அரசுக்குச் சார்பாக இயங்குவதால், தான் அரசியல்வாதி இல்லை என்று காரணம் காட்டி நழுவியுள்ளார் அவ்வளவுதான்.



0 Responses to நான் அரசியல்வாதி இல்லை: யாழ்.அரச அதிபர் இமெல்டா (படங்கள் இணைப்பு)