அம்மாவிற்கான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஊர்ச்சங்கங்கள், பாடசாலைகள், கழகங்கள், அமைப்புகள், சார்பாக மலர்வளையங்கள் வைத்து வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.
பார்வதி அம்மாவிற்கான இரங்கல் கவிதை வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து கலந்துகொண்ட அமைப்புகளின் பிரதிநிதிகளின் இரங்கல் உரைகளை வழங்கினர். தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற உறுதிமொழியுடன் தேசத்தின் அன்னைக்காண வீரவணக்க நிகழ்வு நிறைவுபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான மொன்றியல் வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டு அன்னைக்கு வணக்கத்தை செலுத்தினர்.




0 Responses to மொன்றியலில் நடைபெற்ற பார்வதி அம்மாவின் வீரவணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)