Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டன் ஈலிங் ரவுண் ஹோல் "பிறின்ஸ் மண்டபத்தில்" (22-02-2011) அன்று மாலை 6 மணிக்கு இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகின.

முதன்மைச் சுடர்ரேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் முதன்மைச் சுடரை மாவீரர் குடும்பத்தை சேர்ந்த திருமதி. சண்முகசுந்தரம் ( லெப்.கேணல் பாமா மற்றும் லெப். வெங்கடேஸ் ஆகிய மாவீரர்களின் தாயார்) அவர்கள் ஏற்றிவைத்தார்.

முதன்மை சுடரேற்றலைத் தொடர்ந்து இதுவரை காலமும் போரினால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காகவும், தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அடுத்து "தேசத்தின் பேரன்னை" க்கான ஈகைச்சுடரினை ஈலிங் நகரசபை உறுப்பினர்களின் தலைவர் திரு. யூலியன் பெல் (Mr.Julian Bell - Leader of Ealing Councilors) அவர்கள் ஏற்றிவைக்க, "தேசத்தின் பேரன்னை" திருமதி. வேலுப்பிள்ளை பார்வதியம்மா அவர்களின் உறவினர் திருமதி. இந்திராணி அவர்கள் திருவுருவப் படத்திற்கு மலர்மாலையினை அணிவித்தார். அதைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு நகரசபை உறுப்பினர்களான Mr.Ranjith Dheer, Mr.Surinder Varma, Mr.Pada, Mr.Mohamed Cowsher, Mr.Thaya Idaikadar, Mr.Suresh Krishna, Mrs.Sasikala Suresh ஆகியோர் வருகைதந்து "தேசத்தின் பேரன்னைக்கு" மலர்வணக்கம் செலுத்தி தமது இரங்கற் செய்திகளையும் மக்களோடு பகிர்ந்து சென்றனர்.

பெருந்திரளான மக்கள் "தேசத்தின் பேரன்னை" க்கு இறுதிவணக்கம் செலுத்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது வணக்கத்தை செலுத்தியதோடு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

இறுதிவணக்க நிகழ்வு என்பதால் "தேசத்தின் பேரன்னை" யின் நினைவு சுமந்த கவிதைகளும், நினைவுரைகளும் இடம்பெற்றது. தமிழீழத் தேசியத் தலைவரின் சகோதரர் திரு. மனோகரன் அவர்களின் பாடசாலை நண்பர் திரு..சிறிதரன், நாடுகடந்த தமிழீழ அசசுப் பிரதிநிதி திரு. செல்வராஜா, பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த திரு. ராஜா சரவணன், நாடுகடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதி ஜெயவாணி, சுதா, திரு.சிறீகாந்தா ஆகியோர் நினைவுரைகளை வழங்கினர்.

கவிஞர் சிவசுப்ரமணியம், பாலச்சந்திரன், சிறிகாந்தா, சித்திரா, ரெமீனா, கௌரி, அமுதலிங்கம், மருதீசன் ஆகியோரின் தேசத்தின் பேரன்னையின் நினைவு சுமந்த கவிதைகளும் இடம்பெற்றன.

அத்தோடு நிகழ்வின் சிறப்பாக தமிழகத்தில் இருந்து ஒலிப்பதிவூடாக பெறப்பட்ட உணர்ச்சிக் கவிஞ்ர் காசி ஆனந்தன், மற்றும் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் நினைவுசுமந்த உரைகளும், டுபாயிலிருந்து பாவலர் வித்தியாசாகர், மற்றும் தமிழகத்திலிருந்து சங்கிலியன் ஆகியோரின் கவிதைகளும் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

மாலை 6 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு இடைவிடாது தொடர்ச்சியாகவும், உணர்வுபூர்வமாகவும் சிறந்தமுறையில் நடைபெற்று இரவு 9 மணிக்கு நிகழ்வு நிறைவுபெற்றது.

















1 Response to பிரித்தானியத் தமிழர்களின் பேரெழுச்சியுடன் லண்டனில் நடைபெற்ற "தேசத்தின் பேரன்னைக்கு" இறுதிவணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)

  1. இது தமிழரின் பண்பாடு. மரணித்தவர்க்கு மதிப்பளிப்பது.எமக்காய் வாழ்ந்தவரை நினைவுகூர்வது. ஆனால் சிங்கள இனவெறியனின் பண்பாடு என்ன என்பதனை பேரன்னையின் சிதைக்குச் செய்த அட்டூழியத்திலிருந்து தெரிந்து கொள்ளாம். அன்னையே யார் என்ன செய்திருப்பினும் நீங்கள் எம் இதயத்தில் தெய்வமாய் வீற்றிருப்பீர்கள்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com