Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தழிழீழத் தேசியத் தலைவரை ஈன்றெடுத்த தமீழீழத் தேசத்தின் தாய் பார்வதி அம்மாளின் அஞ்சலி நிகழ்வு அவுஸ்திரேலியா, சிட்னியில் ஹோம்புஸ் ஆண்கள் உயர்தரப் பாடசாலையில் 23.02.2001 பி.. 7.15 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சிட்னிப் பொறுப்பாளர் திரு ஜனகனின் தலைமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

அன்னையின் உறவினரான திருமதி கனகாம்பிகை அற்புதநாதன் அவர்கள் தீபத்தை ஏற்ற, திரு ஜெகதீஸ்வரன் அவர்கள் மலர் அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

மண்டபம் நிறைந்த நிலையில் பல நூற்றுக்கணக்கான மக்கள் எமது தேசத்தின் தாய்க்கு மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து தமிழீழ நாடுகடந்த அரசின் சிட்னிப் பிரதிநிதிகளில் ஒருவரான சேரன் ஸ்ரீபாலன் அவர்களின் அஞ்சலி உரையும் தொடர்ந்து சிறப்புப் பேச்சாளரும் முன்னாள் கம்பன் கழகத் தலைவருமான திரு திருநந்தகுமார் அவர்கள் அன்னையின் பெருமையை அழகான தமிழில் எடுத்துக் கூறினார். பின்னர் மருதநாயகம் அவர்களின் கவிதாஞ்சலியைத் தொடர்ந்து, மே 17இல் தேசியத்தலைவரின் பெற்றோரை முள்ளிவாய்க்காலிலிருந்து முகாமிற்கு அழைத்துச் சென்றவரான திரு ஜெகதீஸ்வரன் அவர்கள் அன்னையுடன் ஏற்பட்ட அனுபவத்தை எடுத்துரைத்தார்.

இறுதியாக தேசத்தாயின் இறுதி நிகழ்வடங்கிய காணொளி காண்பிக்கப்பட்டு இரவு 8.30 மணியளவில் அஞ்சலி நிகழ்வு நிறைவு பெற்றது.

0 Responses to அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வீரத்தாயின் வீரவணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com