Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிங்கள அரசினால் செயலாக்கப்பட்ட , கற்பனைக்கெட்டாத ,மனிதாபிமானமற்ற கொடூரமான இனவழிப்பு என்னும் பாதகச்செயலின் மூலம், தமிழ்த் தேசியத் பிரச்சனை இன்று உலக அரங்கில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது.

கடந்த ஆண்டு டென்மார்க் தமிழர் பேரவையால் போர்க்குற்றத்தில் நேரடியாக ஈடுபட்ட அத்தோடு பங்கெடுத்த அதன் பின்னர் வெளிநாடுகளுக்கு தூதுவர்களாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தளபதிகளுக்கு எதிரான வழக்கு பதிவு சம்மந்தமாக அவர்களின் சட்டத்தரணி ஊடாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட கோரிக்கைகளுக்கு, பல தடவை கடிதங்கள் ஊடாக கேட்ட பின்னரும் , இன்றுவரை எவ்வித மறுமொழியும் கிடைக்காத படியால் , இம் முறை அதை வலியுறுத்தும் முகமாக திரு பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன் ஆகியோர் நீதி கேட்டு டென்மார்க்கில் இருந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நோக்கி மிதிவண்டிப்பயணத்தை மே முதலாம் நாள் Struer எனும் நகரத்தில் இருந்து ஆரம்பித்தனர்.

ஏழாவது நாளாக தொடரும் இப் பயணம் சனிக்கிழமை 7 .05 .2011 இன்று யேர்மன் நாட்டுக்குள் Neumünster நகரத்தில் இருந்து Hamburg நகரத்தின் ஊடாக Harburg நகரத்தை வந்தடைந்தது. Hamburg நகரத்தில் இவர்களுக்கும் அத்தோடு இடதுசாரி கட்சியின் பிரதிநிதிக்கும் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அங்கு வாழும் தமிழ் மக்கள் இவர்களை ஆவலோடு வரவேற்றனர். இதன் தொடர்ச்சியாகவே போர்க்குற்ற நாளை முன்னிட்டு இன்று அனைத்துலக மக்களவைகள் இப்போராட்டத்தில் இணைந்துள்ள அதேவேளையில் இக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கையெழுத்துக்களைச் சேகரித்து அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்கப்படவுள்ள மனுவில் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சொல்லில் அடங்கா துயரத்தில் துடிக்கும் எம் உறவுகளின் உரிமைக்கு இவர்களின் உறுதி தளராத நீதி கேக்கும் பயணத்தை அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் ஆதரிப்பதோடு அவர்களுக்கு வாழ்த்தும் உற்சாகமும் வழக்கும் முகமாக அவர்களை தொடர்புகொள்வதற்கு பின்வரும் தகவல்களை இங்கே குறிப்பிடுகிறோம் .

நேரடித் தொடர்பு: (0049 ) 01746356387

வலைத்திரையில் டென்மார்க்கில் இருந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நோக்கிய மிதிவண்டிப்பயணம்:forum@dansktamilskforum.dk/மின்னஞ்சலில் மற்றும்

முகப்புத்தகத்தில் உங்கள் வாழ்த்து செய்திகளை அனுப்புவதற்கு

Facebook: 1000 km for retfærdighed - War Crimes Day

நன்றி

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை




0 Responses to ஏழாவது நாளாக தொடரும் 1000 Km நீதி தேடி மிதிவண்டிப்பயணம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com