இந்த செய்தியை நோர்வேயின் தேசிய ஊடகமான ஆவ்தன் போஸ்ரன் நாழிதழ் 06.05.11 மாலை செய்தியிலும் 07.05.11 காலை செய்தியில் ஜந்து பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அப்பத்திரிகையில் தெரிவித்துள்ளதாவது.
மகிந்த, கோத்தபாய உற்பட இலங்கையில் உள்ள உயர்மட்ட தலைவர்கள் 20 பேருக்கு எதிராக போர்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது தொடரப்பட்டுள்ள வழக்கில் மகிந்தர் போன்ற இலங்கையின் உயர்மட்ட தலைவர்களும் அடங்குகின்றனர், அவர்கள் வேறு நாடுகளுக்கு பயணம் செய்யும் போது அவர்களுக்கு பாதுகாப்பு உண்டு. அந் நாடுகளில் அவர்கள் கைதுசெய்ய முடியாத ஒரு நிலை காணப்படுகிறது. ஆனால் அரசு முறைப் பயணத்தைத் தவிர, தனிப்பட்ட ரீதியாக அவர்கள் வேறு நாடுகளுக்குச் செல்லும் போது கைதாகும் வாய்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக நோர்வேயில் தொடரப்பட்டுள்ள வழக்கில், பிரதிவாதிகளாக 20 பேரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது. இவர்கள் மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
போர் நடைபெற்ற காலத்தில், மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் என பல்வகையான சான்றுகள் நோர்வே நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.இனி நோர்வே நாட்டினுள் இலங்கை உயர் அதிகாரிகள் எவரும் வரமுடியாதவாறு தற்போது போடப்பட்டுள்ள வழக்கு கடுமையாக உள்ளதாகத் நோவேயின் தேசிய ஊடதத்தில் தெரிவிக்கப்பட்டள்ளது.
சமாதான காலத்தில் அதன் ஏற்பாட்டாளராக இருந்த நோர்வே அரசாங்கம் தாம் நடு நிலை வகிப்பதாகக் கூறிவந்தாலும், புலிகளின் விழ்ச்சிக்குப் பின்னர் இலங்கை அரசோடு தனது உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டுள்ளது. அதற்கும் ஒரு படி மேலேபோய், புலம்பெயர் தமிழர்களையும், இலங்கை அரசையும் தான் சேர்த்துவைக்கப் போவதாகவும் அது கூறிவருகிறது.இதேவேளை அண்மையில் நோர்வேயின் தேசிய வானொலி ஜநாவின் அறிக்கை தொடர்பாக நடத்திய கருத்து பகிர்வில் முனாள் சமாதான தூதுவர் எரிக்சூல்கைம் அவர்கள் அறிக்கை தொடர்பாக பேசினால் சிறீலங்காவால் எதிர்பு வரும் என்று கருத்து கூறாமர் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் பாரிய நெருக்கடிக்கு மத்தியில் நோர்வே ஈழத்தமிழர் அவையால் இந்த வழக்கு வெற்றிகரமாக நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நோர்வே அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே பெரும் சிக்கல் நிலை தோண்றும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.எது எவ்வாறு இருப்பினும், தமிழர்கள் பரந்து வாழும் நாடுகள் பலவற்றில், இலங்கை அரசுத் தலைவர்களுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றது. இதே நிலை நீடித்தால், இன்னும் சிறிது காலத்தில் இலங்கைத் தலைவர்கள் எந்த ஒரு வெளிநாட்டிற்கும் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலைதோன்றும் என்பதில் சந்தேகமில்லை எனவே இப்படியான வேலைத்திட்டங்களுக்கு மக்களின் ஒத்துளைப்பு மிக முக்கியமானது என்பதை குறிப்பிடுவதோடு நோர்வேயில் முன்னெடுக்கப்பட்ட மிக முக்கியமான இந்த வழக்கு பதிவுக்கு பங்களித்த நோர்வே மக்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும் ஈழத்தமிழர் அவையும் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கின்றது.
இங்கே அழுத்தி பார்க்கவும்.



0 Responses to நோர்வே மக்கள் அவையால் சிறீலங்கா போர்க் குற்றவாளிகள் மீது வழக்கு தாக்குதல்