ஓசாமா பின்லேடன் பண்ணை வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. பின்லேடன் தன்னைப் பற்றிய செய்தியை தானே பார்ப்பது போல இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளது.அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் இப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக அமரிக்க பென்டகன் தெரிவித்துள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியாயின் அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும், பண்ணை வீட்டிற்குள் ஏற்கனவே அமெரிக்காவால் கமரா பொருத்தப்பட்டு இருந்ததா இல்லை பின்லேடனின் ஆட்கள் பொருத்தியிருந்த கமராவால் இந்த வீடியோ எடுக்கப்பட்டதா என்று அவர்கள் தெளிவாகக் கூறவில்லை.
பாதுகாப்புக்காக வீட்டைச் சுற்றி பல வீடியோக் கமராக்கள் போடப்பட்டு இருந்திருக்கிறது. அவை வயர் மூலம் தொடர்புடையதாயின், அக் கமராவில் பெறப்படும் காட்சிகள் குறித்த திரையில் பார்க்க முடியும். ஆனால் வயர்லஸ் என்று அழைக்கப்படும் கமராக்களாயின் குறித்த திரைக்கு அது தனது பதிவுகளை ரிரான்ஸ் மிட் பண்ணும். அப்படி அது ரிரான்ஸ் மிட்(ஒளிபரப்பும்) போது அதனை ஒத்த சனல்( அலைவரிசை) கொண்ட உள்வாங்கிகளை எவர் வைத்திருந்தாலும் அந்தக் கமரா ஒளிபரப்புவதை பார்க்க முடியும். அப்படி அமெரிக்கா எதிரி பொருத்திவைத்திருந்த கமரா ஊடாக வேவுபார்த்துள்ளதா என்ற சந்தேகமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எது எவ்வாறு இருப்பினும், பல மாதங்களாக பின்லேடனின் வீட்டை வேவுபார்த்து சரியான நேரத்தில் தாக்குதலை துல்லியமாக நடத்தியுள்ளது அமெரிக்கா. அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் அனைத்துத் தீவிரவாதத் தலைவர்களும் தற்போது உஷாராகியுள்ளனர். எந்த நாட்டில் இருந்தாலும் அமெரிக்கா ஊடுருவி தாக்குதலை நடத்தலாம் என பலர் அஞ்சுவதாக சில ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.
காணொளி இணைப்பு





0 Responses to ஓசாமாவின் புதிய புகைப்படங்கள்: சில அதிர்சி தகவல்! (படங்கள், காணொளி இணைப்பு)