இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களும், கீழ்க்காணும் இடங்களில், தத்தமது இருப்பிடத்திற்கு அருகாமையிலுள்ள இடத்திற்கு சென்று வன்னிப் போரில் கொல்லப்பட்ட போராளிகளுக்கும் அநியாயப் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கும் மலரஞ்சலி செலுத்துமாறு வேண்டுகிறோம்.
மேலும் எதிர்வரும் 15ம் திகதி மாலை 5மணிக்கு ஆரம்பமாகும் ”தமிழின அழிப்பு நினைவேந்தல்” நிகழ்விலும் பொது மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும், ஸ்ரீலங்காவைப் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்துமாறு கோரும் கையொப்ப மனுவிலும் கையொப்பமிடுமாறும், 18ம் திகதி நியூயோர்க் ஐ.நா. சபை முன் நடைபெறவிருக்கும் பேரணியிலும் மனமுவந்து வந்து கலந்து கொள்ளுமாறும் நாடு கடந்த தமிழீழ அரசு அன்புடன் வேண்டி நிற்கிறது,
12ம் திகதி அஞ்சலி நடைபெறும் இடங்கள்:
Scarborough: Sangamam Banquet Hall 42 Tuxedo Court Sacrborough.
Markham: Markham Civic Center.
Mississauga: Yarl Coorperative Homes 2584 Rugby Rd, Mississauga, ON L5B 4B4
Brampton: Professors Lake Recreation Centre 1660 North Park Dr, Brampton, ON L6S 4B
15ம் திகதி தமிழின அழிப்பு நினைவேந்தல் - நடைபெறும் இடம்
Scarborough Civic Center Albert Campbell Square.
ஏப்ரல் 25, 2011 அன்று எமது அரசு வெளியிட்ட ”தமிழீழ தேசிய துக்க தினம் மற்றும் நினைவேந்தல் வாரம்” பற்றிய பிரகடனத்தின் பிரகாரம் ”தமிழீழ தேசிய துக்க தினமும், நினைவேந்தல் வாரமும்” பிரதி ஆண்டு தோறும் நடைபெறும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசு தெரிவித்துக் கொள்கிறது.
றோய் விக்னராஜா
உள்துறை அமைச்சின் ஒன்ராரியோ செயலர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
(416)457-1633



0 Responses to தமிழீழ அரசாங்கம் விடுக்கும் அழைப்பு