இலங்கை அரசு போர்க்குற்றம் செய்துள்ளதாக ஐ.நா., குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க, இந்தியாவின் ஆதரவு அவசியமாகிறது என, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது பொதுமக்கள் வாழும் பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதால், அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த போர்க்குற்றத்தின் மூலம், மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட மூவர் குழு சமீபத்தில் அறிக்கை சமர்பித்தது.
இறுதிக் கட்டப் போரின் போது அத்துமீறல்கள் நடந்துள்ளதாக இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, ராஜபக்ச மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவற்றின் மீது விசாரணை நடத்தப்பட்டால், அவருக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த குழு அளித்த அறிக்கை குறித்து, இலங்கையிடம் விசாரிப்பதற்காக, இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார், வெளியுறவு செயலர் நிருபமா ராவ் ஆகியோர் இலங்கை செல்ல உள்ளனர்.
இது குறித்து கொழும்பில் செய்தியாளர்களிடம் இலங்கை அதிபர் ராஜபக்சே குறிப்பிடுகையில்,
இந்தியா எல்லா காலங்களிலும் இலங்கைக்கு ஒத்துழைத்து வருகிறது. எனவே, இந்தியாவுடனான எங்களது உறவு எப்போதும் நல்ல நிலையிலேயே இருக்கிறது.
ஐ.நா., குழு அளித்துள்ள அறிக்கையை நாங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. இதற்கு தக்க முறையில் பான் கி மூனிடம் எடுத்து சொல்வோம்.
இதனால், ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது. இவ்வாறு ராஜபக்சே கூறினார்.



இலங்கை அன்னையின் அழு குரல்.மடியில் பிள்ளையின் மரன ஒளம்.கையில் பிள்ளை மார்பில் பசியை தேடும்.கானும் காட்ச்சிகள் உலகின் மனதை இருக்கவில்லையா...?கதரும் குரல்கள் உலகின் செவியை கிலிரிக்க வில்லையா....? இலங்கை தமிழரை கிருகராய் மாற்ற ஐ.நா சென்று நற்செயல் புரிந்தீரோ.கருவை அருத்து கள்ளரை புதைக்கும் சிங்கலனுக்கு.கொள்ளைபுரத்தில் பொருட்களை வாரி இரைத்தீரோ....!உதிரம் குடித்து இன்பம் கொள்ளும் சிங்கலனே.உன் மதி கெட்ட செயலாள் மாண்டுவி போகிறாய்.கடவுளுக்கே அடுக்காதடா உன் கள பனி வேட்டை