போர்க்குற்றவாளியான கடற்படைத்தளபதி திசர சமரசிங்கவின் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் நியமனத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. அண்மையில் ஐநா விசாரணைக்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பொதுமக்கள் மீது கடற்படையினர் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டமையை சுட்டிக்காட்டியிருந்தது.குறிப்பாக பொதுமக்களை ஏற்றிச்செல்வதற்கு முள்ளிவாய்க்காலில் காத்துநின்ற கப்பல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அறிவித்திருந்த நிலையில் இந்நியமனத்தை அவுஸ்திரேலிய ஏற்றுக்கொண்டுள்ளது. அத்தோடு 500 இற்கு மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் கொலைகளில் நேரடியாக சிறிலங்கா கடற்படையே ஈடுபட்டமைக்கான சாட்சிகள் இருக்கின்ற நிலையில் இந்நியமனம் பலத்த அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது.
அதன் பிரகாரம் அவர் எதிர்வரும் இரண்டொரு வாரங்களில் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவராக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா வெளிநாட்டமைச்சு இன்று அறிவித்துள்ளது.
திசர சமரசிங்கவின் தூதுவர் நியமனத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் அவுஸ்திரேலியாவிலுள்ள தமிழ் அமைப்புகள் சுட்டிக்காட்டியபோது தாம் அவ்வாறு அந்நியமனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என அவ்வரச பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.
எனினும் தமிழ் மக்களின் எவ்வித கரிசனையையும் பொருட்படுத்தாது இந்நியமனம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



0 Responses to ஐசிஆர்சி கப்பல் மீது தாக்குதல் மேற்கொண்ட கடற்படைத்தளபதி சமரசிங்க அவுஸ்திரேலிய தூதுவராக நியமிப்பு!