Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ இராஜதந்திர அரசியல் நடாத்துவது குறித்து விமல் வீரவங்சவுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துள்ளார்.

கடந்த மே தினத்தில் விமல் வீரவங்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி கட்சியினர் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் நிபுணர் குழுவின் உறுப்பினர்களையொத்த வேடமணிந்த நபர்கள் மற்றும் பொம்மைகள் போன்றவற்றையே காட்சிப்படுத்தி மேதின ஊர்வலத்தை நடாத்தியிருந்தனர்.

அத்துடன் இலங்கைக்கெதிராக போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் வண்ணமான அறிக்கைகளைத் தயாரித்தமை குறித்து அவர்கள் அனைவரும் நரகத்துக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் விமல் வீரவங்ச உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருந்தார்.

மே தின ஊர்வலங்கள் முடிவடைந்த பின் அலரிமாளிகைக்கு விமல் வீரவங்சவை வரவழைத்த மஹிந்த ராஜபக்ஷ, விமல் வீரவங்சவின் கட்சியினர் மேற்கொண்ட சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உள்நாட்டு மக்களின் உணர்வுகளைத்தட்டியெழுப்பி ஆதரவுத்தளத்தை அதிகரித்துக்கொள்வதற்காக வெளிநாட்டு தலைவர்களைப் பகைத்துக் கொள்ளாத இராஜதந்திர அரசியல் செய்வது குறித்தும் பாடம் சொல்லிக் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே விமல் வீரவங்சவை மஹிந்த அர்ச்சித்த சமயம் அதற்குப் பக்கத்து அறையில் அமர்ந்திருந்த ஹெல உறுமய முக்கியஸ்தர்கள் இருவர் பிரஸ்தாப விடயத்தை ஊடகங்களுக்குக் கசிய விட்டுள்ளனர்.

0 Responses to இராஜதந்திர அரசியல் குறித்து மஹிந்த விமல் வீரவங்சவுக்குப் பாடம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com