Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு அறிக்கை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து ஆராயும் பொருட்டு இந்திய இராஜதந்திரக் குழுவொன்று எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ், இந்திய பிரதமரின் செயலாளர் ரி.கே. நாயர் ஆகியோரே இலங்கை செல்லவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இராஜதந்திரக் குழுவானது, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து விரிவாக ஆராயவுள்ளதுடன், வடக்கில் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் ஆராயுமென தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வரவுள்ள இந்திய இராஜதந்திரக் குழுவானது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளதுடன், அரசதரப்பு முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்திய உயர் பீடத்தை சந்திப்பதற்கு இலங்கைத் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ஆனால் இந்தச் சந்திப்புக்கள் குறித்து இந்திய தரப்பு சம்மதம் தெரிவிக்கவில்லை எனவுத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய இராஜதந்திரக் குழுவின் இலங்கை வருகைக்குப் பின் மேற்படி சந்திப்பு நிகழலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பாக, இலங்கையின் உயர்மட்டக்குழு இந்தியாவுக்கு செல்லவிருந்த போதும் இந்தியா அதற்கு உடன்பாடு தெரிவிக்கவில்லை.

இந்தநிலையில் இந்திய உயர்ம்ட்டக்குழுவின் விஜயம் இடம்பெறவுள்ளது.

இக்குழுவின் இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இணக்கமான விடயங்களுக்கு உடனடியான தீர்வைக்காணவேண்டும் என்று இந்திய குழு அழுத்தம கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

இதேவிதமான கோரிக்கையை அமெரிக்காவின் தெற்காசிய துணை இராஜாங்க செயலாளர் ரொபோ்ட் பிளேக் இலங்கை அரசாங்கத்திடம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக ஆராய இந்திய உயர்மட்டக் குழு இலங்கை விஜயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com