Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழின அழிப்பு நினைவு நாள் கடந்த வாரம் உலகெங்கும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. இதன் ஓர் அங்கமாக கனடா தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழர் இன அழிப்பு மாதத்தினை ஒட்டி நடத்தப்பட்ட மரம் நடுகை நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை, மே மாதம் 22ஆம் திகதி டவுன்ஸ்வியூ பூங்காவில் நடத்தப்பட்டது.

கனடா தமிழ் இளையோர் அமைப்பின் மார்க்கம் வாளாக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் பல மாணவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை டவுன்ஸ்வியூ பூங்கா நிர்வாகம் ஒழுங்கு செய்திருந்தது.

இதில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களும் தாயகத்தில் சிங்கள இனவாத அரசினால் நடத்தப்பட்ட தமிழின அழிப்பை மனதில் நிறுத்தி, அதனை பிற இன மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இம்மரநடுகை நிகழ்வில் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டனர்.

இவ்வாறான பல மரநடுகை நிகழ்வுகள் கடந்த காலங்களில் கனடா தமிழ் இளையோர் அமைப்பினரால் நடத்தப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.









1 Response to கனடா தமிழ் இளையோர் அமைப்பினரால் மரம் நடுகை நிகழ்வு (படங்கள் இணைப்பு)

  1. maram nadum ilyorea ungalseyalukku valthukal tamilarkalin thirumanam matrum mukkia nigalvukal anaithum maram naduvadhan vaayil aagavea thodangum ungal maram naduthalum tamildesiathin pudhia thodakamaka amaiyattum

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com