கனடியத் தமிழர் தேசிய அவையின் ஏற்பாட்டில் “மே 18 போர்க்குற்றநாள்” நிகழ்வானது மொன்றியலில் அமைந்துள்ள அமெரிக்கத் துணைத் துவராலயத்தின் முன்பாக மே 18 2011 புதன்கிழமை மாலை 6 மணியளவில் ஆரம்பமானது.
முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த பல்லாயிரம் தமிழர்களில் ஒருவரான திரு.அ.ள.மரியநாயகம் அவர்கள் பொதுச்சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து 2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனஅழிப்பை, தம் உறவுகளின் கதறல்களை, இதயங்களில் சுமந்தவாறு கைகளில் தீபமும், கண்களில் நீருமாக மக்கள் நின்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிகழ்வில் Production Multimode இலிருந்து வருகைதந்திருந்த Mr. Malcolm Guy ,Immigration Worker center இலிருந்து வருகை தந்திருந்த Mr. Mustafa Hanway ஆகியோர் இலங்கை அரசின் இனப்படுகொலையை கண்டிக்கும் வகையில் உரையாற்றியிருந்தார்கள்.



அழுவதற்கான நாளல்ல இது வீறு கொண்டெழுவதற்கான நாளே. கொலைவெறியரை சட்டத்தின் முன் நிறுத்தும் வரை ஓயாது ஒலிக்கட்டும் பாதிக்கப்பட்ட எம் குரல்கள்.