Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டுமென்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்திருப்பதை மனதாரப் பாராட்டி வரவேற்கின்றோம். இந்தத் தீர்மானத்தை தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால்தான் இந்த மரண தண்டனையை நிறுத்த முடியும். தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையொட்டி பாராளுமன்றத்திலும் இத்தகைய தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

0 Responses to மரண தண்டனையை குறைக்க பாராளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற முன்வர வேண்டும்: திருமா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com