பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் காக்க முதல் அமைச்சரால் முடியும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் விடுத்த வேண்டுகோளுக்கு பலன் கிடைத்திருக்கிறது. இந்த மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்என்று தமிழகச் சட்டப்பேரவையில் முதல் அமைச்சரே அரசு சார்பில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறார்.
முதல்வரின் இந்த நடவடிக்கை, வேதனையில் துடித்துக் கொண்டிருந்த தமிழ் இதயங்களுக்கு மருந்து போடும் வகையில் அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதித்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ள முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்தகட்டமாக தமிழக அமைச்சரவையைக் கூட்டி, அதில் மூவரின் தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் தீர்மானத்தை முதல் அமைச்சர் நிறைவேற்றவேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ் இதயங்களுக்கு மருந்து போடும் வகையில் அமைந்துள்ளது - முதல்வருக்கு ராமதாஸ் பாராட்டு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
31 August 2011



0 Responses to தமிழ் இதயங்களுக்கு மருந்து போடும் வகையில் அமைந்துள்ளது - முதல்வருக்கு ராமதாஸ் பாராட்டு