Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாமியாரும், திருமதி. மதிவதனி பிரபாகரன் அவர்களின் தாயாருமான திருமதி. ஏரம்பு சின்னமா அவர்கள் காலமானார்.

சரவணையைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஏரம்பு சின்னம்மா அவர்கள் அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.

இவர் கடந்த 06-09-2011 செவ்வாய்கிழமை காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் திருமதி. அருணாதேவி குமாரதாஸ் (லண்டன்), சிறீதரன் (டென்மார்க்), திருமதி. மதிவதனி பிரபாகரன் (தமிழீழம்), மாவீரரான பாலச்சந்திரன் ஏரம்பு (கப்டன் அருண்)ஆகியோரின் தாயாராவார்.

இவர் திரு. குமாரதாஸ் (டென்மார்க்), தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் (தமிழீழம்), திருமதி. சாந்தினி சிறீதரன் ஆகியோரின் மாமியாராவார்.

இவர் பூர்ணிமா (டென்மார்க்), வித்யா அனஸ் (டென்மார்க்), இந்துமதி (டென்மார்க்), அருணன் (டென்மார்க்), சந்துஜா (டென்மார்க்), சாள்ஸ் அன்ரனி (தமிழீழம், துவாரகா (தமிழீழம்), பாலச்சந்திரன் (தமிழீழம்) ஆகியோரின் பேத்தியும், நீலனின் பூட்டியும் ஆவார்.

0 Responses to இரண்டாம் இணைப்பு: தமிழீழ தேசிய தலைவரின் மாமியார் சின்னம்மா மரணமானார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com