Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தே.மு.தி.க. சார்பில் உள்ளாட்சி மன்ற தேர்தல் பிரசாரக்கூட்டம் சென்னை மயிலாப்பூரில் உள்ள மாங்கொல்லையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த்தின் பேச்சு:

’’உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மக்களோடுதான் கூட்டணி என்று சொல்விட்டு இப்போது கம்யூனிஸ்டு கட்சியோடு கூட்டணி வைத்துள்ளீர்களே என்று ஒரு நிருபர் கேட்டார். இப்போதும் சொல்கிறேன். மக்கள்தான் தெய்வம். அவர்களோடுதான் கூட்டணி.

உள்ளாட்சி மன்றங்களில் மக்களுக்கு சாலைவசதி, குடிநீர்வசதி, போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய நிதி உள்ளது.

சென்னையில் மழை பெய்தால் மழைநீர் ரோட்டில் நிறைய தேங்கி இருக்கிறது. குப்பைகள் தேங்கி கிடக்கிறது. கொசுத்தொல்லையும் இருக்கிறது.

தே.மு.தி.க.வை உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெறச் செய்தால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்.

இப்போது கறவை மாடு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை நான் எப்போதோ சொல்லி இருக்கிறேன். அதுபோல நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்கள் வீடு தேடிவரும் என்று அன்றும் சொன்னேன். இன்றும் சொல்கிறேன்.

தே.மு.தி.க.எப்போதும் மக்கள் பிரச்சினையை தீர்க்க விரும்பும். எந்த ஆட்சி அமைந்தாலும் அந்த ஆட்சி பற்றி 6 மாதம் விமர்சனம் செய்வதில்லை என்று அண்ணா, காமராஜர் ஆகியோர் கூறியிருந்தனர். அதைத்தான் நானும் கடைப்பிடிக்கிறேன்.

கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சினை காரணமாக நேரில் சென்று வந்தேன். மக்கள் பிரச்சினை எங்கு நடந்தாலும் அங்கு சென்று அவர்களின் பிரச்சினையை தீர்க்க முயல்வேன்.

மக்களின் பிரச்சினைகளை முழுமையாக தீர்க்க உள்ளாட்சி மன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை ஆதரியுங்கள். வெற்றிபெறச் செய்யுங்கள்.

சென்னை மாநகர மேயர் வேட்பாளர் வேல்முருகனை வெற்றிபெறச் செய்வீர்கள். தே.மு.தி.க.கவுன்சிலர் வேட்பாளர்களையும் வெற்றிபெறச் செய்யுங்கள்’’.

0 Responses to அதிமுக பற்றி விஜயகாந்த் இதுவரை விமர்சிக்காமல் இருந்தது ஏன்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com