Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லி உயர்நீதிமன்றத்தின் 5ம் வாயிலில் காலை நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி என்னும் அமைப்பினர் உரிமை கோரியுள்ள போதிலும், அவர்கள்தான் இந்தத் தாக்குதலை நடாத்தினார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என உட்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் எஸ்.ஜி.சின்ஹா, அதுபற்றி இந்திய உட்துறை அமைச்சின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். இதுமட்டுமா அமெரிக்காவில் அறுவை சிகிச்சைசெய்துகொண்டு நாடு திரும்பிய சோனியா காந்தியும் இரங்கல்செய்தி வெளியிடவேண்டி வந்துவிட்டது. குண்டுவெடிப்புக்கு உரிமை கோரிய இஸ்லாமிய அமைப்பு தனது உரிமைகோரலை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளது.

harkatuljihadi2011@gmail.com என்ற இ-மெயில் ஐடியில் இருந்தே உரிமை கோரல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம் என இந்திய தேசிய புலனாய்வுச் சேவை தெரிவித்துள்ள என அதிர்வு இணையம் அறிகிறது. இ-மெயில் எந்த இடத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பதை 20 அதிகாரிகள் அடங்கிய புலனாய்வுக் குழுவினர் ட்ராக் டவுன் பண்ணிவிட்டனர் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது.

ஜம்முவிலுள்ள கிஷ்ட்வார் மாவட்ட இன்டர்நெட் மையம் ஒன்றிலிருந்து குண்டுவெடிப்புக்கு உரிமைகோரல் இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. மையத்தின் உரிமையாளர் விசாரிக்கப்பட்டுள்ளார். மேலதிக விபரங்கள் ஏதும் இன்னமும் தெரியவரவில்லை.

வெடிகுண்டை அங்கே வைத்தவர் அவ்விடத்தை மிக நன்றாக நோட்டமிட்ட பின்னரே குண்டை வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறிய சூட்கேசில் இக் குண்டு இருந்ததாகவும் ரிமோட் கன்ரோல் மூலம் இக் குண்டு வெடிக்கவைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

டெல்லி உயர் நீதிமன்றில் இக் குண்டானது 5ம் வாயிலில் வெடிக்க சில காரணங்களும் உள்ளது. ஏன் எனில் 5ம் வாயிலில் எதுவித பாதுகாப்புக் கமராக்களும் பொருத்தப்படவில்லை. அதுமட்டுமல்லாது அவ்வாயிலில் சனநெருக்கடியும் அதிகமாக இருப்பது வழக்கமாம். தாக்குதலை நடாத்துவதற்கு ஒரு புதன் கிழமையைத் தேர்ந்தெடுத்ததிலும், கவனமான திட்டமிடல் இருந்துள்ளது. காரணம், மற்றைய நாட்களைவிட, புதன் கிழமைகளில்தான் 5ம் வாயிலில் ஜன நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆக மொத்தத்தில் மனிதர்களை எவ்வளவு அதிகம் கொல்லமுடியும் என்றே இஸ்லாமித் தீவிரவாதிகள் கணக்குப் பார்த்துள்ளனர்.

குண்டுவெடிப்புக்கு ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி அமைப்பு உரிமை கோரிய பின்னரும், அதை உட்துறை அமைச்சு உறுதிப்படுத்தாமல் இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன எனக் கூறப்படுகிறது. கடந்த 4 வருடங்களாக இந்த இயக்கம் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கோண்டுள்ள போதிலும், அதை இந்திய அதிகாரிகள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதற்கு, உட்துறை அமைச்சின் "ஏதோ ஒரு" கொள்கை ரீதியான காரணம் இருக்கலாம். குறிப்பிட்ட இயக்கம் இந்தியாவில் இயங்குவதை சில காரணங்களுக்காக அவர்கள் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாமல் இருக்கலாம்.

ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி அமைப்பின் கடந்தகாலச் செயற்பாடுகளைப் பாருங்கள், அதில் ஏதாவது ஒரு தாக்குதலுக்கு இந்த அமைப்புத்தான் காரணம் என மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறதா என்பதையும் பார்த்தால் நிலைமை புரியும்.

"2007 ஆகஸ்ட் 25ல், ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு" ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி இயக்கம்தான் சந்தேக லிஸ்டில் உள்ளது. ஆனால், இன்னமும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை!

"2008 மே 13ல், ஜெய்பூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு" இதே இயக்கம்தான் செய்ததாக சந்தேகம். ஆதாரங்கள் இல்லாததால் நிரூபிக்கப்படவில்லை.

"2008 ஜூலை 25ல், பங்களுருவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள்" இதே இயக்கம்தான் நடாத்தியது. இன்னமும் நிரூபிக்கப்படவில்லை.

"2008 ஜூலை 26ல், அஹ்மதாபாத் தொடர் குண்டு வெடிப்புகள்" இதே இயக்கத்தின் கைவரிசைதான். இன்னமும் நிரூபிக்கப்படவில்லை.

"2008 செப்டெம்பர் 13ல், டில்லி தொடர் குண்டு வெடிப்புகள்." இதே இயக்கம்தான். ஆதாரங்கள்? டில்லி போலிஸ் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

"2008 அக்டோபர் 1ல், திரிபுரா அகர்தாலா குண்டு வெடிப்பு" இதே இயக்கம் உரிமை கோரியது. ஆனால், நிரூபின்ன ஆதாரம் கிடையாது.

"2008 அக்டோபர் 30ல், அசாம் குண்டு வெடிப்புகள்" இதே இயக்கம் ஒரே நாளில் நான்கு இடங்களில் (குவாஹட்டி, பார்பேடா, காக்ராஜ்கர், பாங்கைகான்) குண்டு வைத்தது. ஆதாரமா? இன்னமும் கிடைக்கலிங்க.

இப்போது டில்லி குண்டு வெடிப்புக்கும் இதே இயக்கம் உரிமை கோரியுள்ளது. ஆனால் இந்திய புலனாய்வுத்துறை வாயைத் திறக்கப் போவதில்லை...

0 Responses to harkatuljihadi2011@gmail.com - டெல்லி குண்டுவெடிப்பு: ஈமெயில்லைத் தேடி வேட்டை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com