மக்கள் தொடர்பு(PR) மேம்படுத்தும் தனியார் கம்பெனிகளுக்கும் சனல் 4 தொலைக்காட்சிகளுக்கும் இடையே அறிவிக்கப்படாத பனிப்போர் ஒன்று ஆரம்பமாகியுள்ளதாக சனல் 4 செய்திப் பிரிவின் இயக்குனர் தெரிவித்துள்ளார். தாம் இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தை வெளியிட்ட நாள் முதல் தம்மீது பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்கு திட்டமிடப்பட்ட ரீதியில் இத் தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிகளை நெறிப்படுத்தும் ஓப்ஃகம்(OFCOM) நிறுவனத்துக்கு முறைப்பாடு செய்வது தாம் வெளியிட்ட உள்ள சில புலனாய்வுத் தகவல்களை மற்றைய ஊடகங்களுக்கு கசியவிடுவது மற்றும் செய்திச் சேவையாளரின் கணனிகளை ஹக் செய்வது என்பன சர்வசாதாரணமாக நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொடர்பு(Public Relations) மேம்படுத்த என பல தனியார் கம்பெனிகள் உள்ளது. அதனை பல மில்லியன் செலவில் இலங்கை அரசானது தமக்காக வேலைசெய்ய அமர்த்தியுள்ளது. இந்தத் தனியார் கம்பெனிகளுக்கு அமைச்சர்கள் மட்டம் தொடக்கம் எல்லாப் பகுதிகளிலும் தொடர்புகள் இருக்கும்.
அவர்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி முன்னேறுவார்கள். அதாவது இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுகிறது என்றால் அவர்கள் அதனைச் சரிசெய்ய மறு திசையில் காய்களை நகர்த்துவார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் பரமேஸ்வரனின் உண்ணாவிரதமாகும். பரமேஸ்வரன் உண்ணா விரதம் இருந்ததால் பிரித்தானிய அரசுக்கு 7 மில்லியன் பணம் நஷ்டம் என்ற செய்தியைக் கசிய விட்டதும் இது போன்ற தனியார் கம்பெனிகளே. பின்னர் அவர் மக்டொனால்ஸ் பேர்கரைச் சாப்பிட்டார் என்ற செய்தியைக் கசியவிட்டது சாட்ச் சாத் அவர்களே.
இதுபோல தற்போது சனல் 4க்கு எதிராக பல முறைப்பாடுகளை மேற்கொள்வதும். அவர்கள் புலனாய்வு செய்து சேகரித்து வரும் செய்திகளை பிற ஊடகங்களுக்கு கொடுத்து அந்தச் செய்தியை பழைய செய்திகளாக்குவதும் இந்த மக்கள் தொடர்பு மேம்படுத்துகிறோம் என்ற தனியார் கம்பெனிகளின் வேலையாக அமைந்துள்ளது.
பி.பி.சியில் ஒளிபரப்பாகும் பனராமா என்னும் நிகழ்சிக்கு கூட இவ்வாறான பல அழுத்தங்கள் இருப்பதாக பி.பி.சி செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய பின்னரே சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் என்றும் அதனை இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு நேரடியாக முன் நின்று வழிநடத்தியது என்ற குற்றச்சாட்டையும் சனல் 4 தொலைக்காட்சி முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
அதிர்வு
சனல் 4 தொலைக்காட்சி மீது அறிவிக்கப்படாத திட்டமிட்ட பனிப்போர் ஆரம்பம்?
பதிந்தவர்:
Anonymous
20 October 2011



0 Responses to சனல் 4 தொலைக்காட்சி மீது அறிவிக்கப்படாத திட்டமிட்ட பனிப்போர் ஆரம்பம்?