லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியின் பிறந்த நகரான சிற்றா இன்றோடு முற்றாக வீழ்ச்சியடைந்தது. முழு நகரமும் தற்போது போராளிகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடாபி ஆதரவுப் படைகள் உயிர்களை காப்பாற்ற ஓட்டமெடுத்துள்ளார்கள். கடைசியாக நடைபெற்ற 90 நிமிடப் போரில் கடாபியின் படைகளில் 20 பேர் மடிந்தனர். ஐந்து கவசவாகனங்கள் மட்டும் தப்பியோடியுள்ளது. தப்பியோடும் கடாபி படைகளை பிடிக்க போராளிகள் முயன்று வருகிறார்கள். போர் முடிந்துவிட்டது என்ற பிரகடனத்தை போராளிகள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை ஆபிரிக்க நாடுகளில் இருந்து 12.000 ஆபிரிக்க படைகளை கூலிக்கு வரவழைத்து மறுபடியும் போரை ஆரம்பிக்க கடாபி திட்டமிடுவதாக தற்போதைய லிபிய பிரதமர் முகமட் ஜிபிரில் தெரிவித்தார். கடாபி சுமார் நாலு தசாப்தங்களாக லிபிய தலைவராக இருந்துள்ளார். லிபியாவுக்கு அருகில் உள்ள வறிய ஆபிரிக்க நாடுகளுக்கு பணம் வழங்கி நல்லுறவையும் வளர்த்து வந்துள்ளார். நேற்று மாலி நாட்டுக்குள் கடாபியின் 68 கவச வாகனங்கள் ஒவ்வொன்றும் எட்டு படையினருடன் நுழைந்துள்ளன. சூடான் பகுதியில் இருந்து சுமார் 12.000 கூலிப்படைகளைப் போருக்கு அமர்த்த கடாபி முயற்சித்துள்ளார்.



0 Responses to கடாபி பிறந்த நகரம் வீழ்ந்தது படைகள் தலைதெறிக்க ஓட்டம்