Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலை களத்தில் இன்னுயிர் நீத்த போராளிகளின் நினைவு நாளான 27.11.2011 அன்று சென்னை கோயம்பேடு அருகே வீரநங்கை செங்கொடி அரங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மாவீரர் நாள் நடைபெற்றது.

பிற்பகல் 4 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் மணிமாறன் குழுவினரின் பறையாட்டத்துடன் நாட்டிய நிகழ்ச்சிகளும் நடந்தன. தொல்.திருமாவளவன், பாவலர் அறிவுமதி, உணர்ச்சிப் பாவலர் காசியானந்தன் ஆகியோரின் பாடல்களுக்கு ஏற்ப நாட்டிய நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்படிருந்தன.

அந்நிகழ்ச்சிகளை தொடர்ந்து மாலை 6.10 மணியளவில் தொல்.திருமாவளவன் ஈகைச் சுடர் ஏற்றினார். அரங்கில் திரண்டிருந்த அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்த விடுதலைப் புலிகளின் வீரவணக்கப் பாடல் ஒலிக்கப்பெற்றது. அப்பாடல் நிறைவு பெரும் வரையில் அனைவரும் நிமிர்ந்து நின்று வீரவணக்கம் செலுத்தினர்.

மேடையில் ஈகைச் சுடர் ஏற்றிய தொல்.திருமாவளவன் மாவீரர்களுக்கான நினைவுச் சின்னத்தின் முன்பு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமானோர் வரிசையில் நின்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஈழத் தமிழர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சுமார் அரைமணி நேரம் இந்நிகழ்வு நடைபெற்றது.

அதன் பின்னர் மீண்டும் தமிழீழ விடுதலைக்கான இசை நாட்டியம் நடைபெற்றது. மேலும் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்ய கோரி மதிமாறன் குழுவினர் 'செங்கொடியின் பறை' என்னும் நாடகத்தை அரங்கேற்றினர். நிறைவாக பாவலர் அறிவுமதி எழுதிய 'வருவாண்டா பிரபாகரன் மறுபடியும்' என்கிற பாடலுக்கு குழந்தைகள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் வீரவணக்க உரையாற்றினார்.













0 Responses to தொல்.திருமாவளவன் தலைமையில் மாவீரர் நாள் 2011 (படங்கள், காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com