Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகத் தமிழர்களால் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்ப்பட்டு வருகின்றது. அமெரிக்காவில் செறிவாக தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நியூ யோர்க்கில் சிறப்பாக மாவீரர் நாள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் சிறப்புரையுடன் இடம்பெற்ற இந்த மாவீரர் நாளில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்தனர்.

சிங்களத்தால் சிதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தையும் மீண்டும் புத்துயிர் பெற வைப்போம்.

தமது கனவுகள் நனவாகி விட்டன என்ற நிறைவுடன் விடுதலையடைந்த ஈழத் தமிழ்ப் பூமியில் நமது மாவீரர்கள் அமைதியாக உறங்குவார்கள்.

உலகின் ஏனைய சுதந்திர மக்கள் போல நமது மக்களும் சுதந்திரமாக கௌரவமாகஇ பாதுகாப்பாகஇ சமத்துவத்துவத்துடன் வாழ்வார்கள்.

இந் நிலை உருவாகும் வரை நாம் நமது இலட்சியப்போராட்டத்தினை ஓயாது முன்னெடுப்போம் என நமது மாவீரர்கள் நினைவுடன் உறுதியெடுத்துக் கொள்வோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனதுரையில் தெரிவித்தார்.

0 Responses to நியூயோர்க் மாவீரர் நாளில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஆற்றிய உரை! (காணொளி)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com