Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இத்தாலி மேற்பிராந்தியத்தில் றெஜியோ எமிலியா நாப்போலி ஆகிய இரண்டு பிரதேசங்களில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் எழிச்சி பூர்வமாக நடைபெற்றது.

தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு தாயகத்தில் துயிலுமில்லத்தில் நடைபெறும் அனைத்த நிகழ்வுகளும் அதே நேரத்தில் மண்டபத்தில் அமைக்கப்பட்ட துயிலுமில்லத்தில் மாவீரச்செல்வங்களின் உறவுகளாலும் பொதுமக்களாலும் வீர வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை மதிப்பளித்து நினைவுப்பொருள் வழங்கப்பட்டது.

பின்னர் திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் எழிச்சி நடனங்கள் கவிதை பேச்சு என்பன இடம்பெற்றன. தேசி மாவீரர் நினைவாக நடாத்தப்பட்ட ஓவியப்போட்டியில் பங்குபற்றி வென்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினர் தனது உரையின் போது நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றினால் எமது சுதந்திர தேசத்தை வெகு விரைவாக மீட்கலாம் என்ற வலுவான கருத்தை பல உதாரணங்களுடன் விளக்கினார்.

இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை தமிழ் இளையோர் அமைப்பு இணைந்த முன்நெடுக்கும் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்கும் ஓர் செயற்திட்டமான தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் நியாயத்தன்மையையும் இனப்படுகொலையையும் வெளிப்படுத்தும் இத்தாலி மொழியிலான கைனூலை இத்தாலி மனித உரிமை பணியாளர்களுடைய முழு ஆதரவுடனும் உருவாக்கப்பட்ட வெளியிடப்பட்டது.

இவ்வருட இறுதிக்குள் அனைத்து மக்களுடைய கைகளிற்கும் கிடைப்பதற்கு ஆவன செய்யப்படும். தமிழ் இளையோர் அமைப்பினருடைய செயற்திட்டங்களும் மக்களிற்கு விளக்கப்பட்டதுடன் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளிற்கு நாம் கரம் கொடுக்க வேண்டும் என்ற வேண்கோளும் விடுக்கப்பட்டு தேசியக் கொடி இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் பாடலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.





0 Responses to இத்தாலி மேற்பிராந்திய தேசிய மாவீரர் நாள் 2011 (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com