'ஐக்கிய நாடுகள் அவையின் வல்லுநர் குழு அறிக்கை" - (தமிழாக்கம் - பூங்குழலி), 'முள்ளிவாய்க்கால் - எமது சாட்சியம்" (கண. குறிஞ்சி, பேரா. ராஜ் இருதயா) ஆகிய இரு நூல்கள் அறிமுக நிகழ்வு வரும் 10 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு சென்னை, தேவநேயப் பாவாணர் நூலக கருத்தரங்கக் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
திருச்சி மக்கள் உரிமைப் பேரவையைச் சேர்ந்த திரு. பானுமதி அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் அறிமுகவுரையை கண. குறிஞ்சி (புதுமலர் பதிப்பகம்) அவர்களும் கருத்துரையை ம. தி. மு. க பொதுச்செயலர் திரு. வைகோ அவர்கள் உட்பட
திரு. விடுதலை ராசேந்திரன் (பெரியார் திராவிடர் கழகம்)திரு. சுரேஷ்(மக்கள் சிவில் உரிமைக் கழகம்), பேராசிரியர் மணிவண்ணன் (சென்னைப் பல்கலைக்கழகம்), திரு. புனிதபாண்டியன் (தலித்முரசு), திரு. மு. வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி), திரு. வ. கவுதமன் (திரைப்பட இயக்குநர்) ஆகியோர் ஆற்றவுள்ளனர்.
நன்றியுரையை திரு. சோழநாடன் (தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம்) ஆற்றவுள்ளார்.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.



0 Responses to வரும் 10 ஆம் நாள் சென்னையில் இரண்டு நூல்களின் அறிமுக விழா!