Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று மாலை பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு, 1948ம் ஆண்டு முதல் சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ்பேசும் மக்கள் மீது இடம்பெற்று வருகின்ற, இனப்படுகொலை, போர்க்குற்றம் மற்றும் மானிடத்திற்க்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஓர் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறித்தி பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்ப்பாட்டில் பிரித்தானியாவில் சமகருத்துள்ள தமிழ் அமைப்புகளுடன் ஓர் கருத்துப்பகிர்வு இடம்பெற்றது. குறிப்பாக பிரித்தானியாவில் செயல்படு ஒன்பதிற்கும் மேற்பட்ட அமைப்புகள் இதில் கலந்துகொண்டு ஒரு மித்த குரலாக ஒலித்திருந்தது பெரும் நம்பிக்கை தரும் விடையமாக அமைந்திருந்தது.

கடந்த மாவீரர் தினத்தில் நடந்த குழுவாதங்களும் போட்டி மவீரர் தினங்களாலும் மக்கள் பலர் குழம்பிப்போய் இருந்தனர். ஆனால் நேற்றைய கூட்டத்டொடரில் அனைத்து அமைப்புகளும் ஒன்றாக இணைந்து மனித உரிமை தினத்தில் தமிழ் மக்களுக்காக ஒன்றாகக் குரல்கொடுப்போம் எனக் கூறியிருந்தது பெரும் வரவேற்க்கத்தக்க விடையமாகும்.

முக்கியமாக வருகின்ற வருடம் மார்ச் மாதம் ஐநாவின் மனித உரிமை பேரவையின் அமவிர்க்கு முன்னர் நாங்கள் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பாக இக் கூட்டத்தில் ஆரயப்பட்டது. இதில் பிரித்தானிய தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானிய உறுப்பினர்கள், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள், பிரித்தானிய தமிழ் கொன்சவற்றி , பிரித்தானிய தமிழ் லேபர், தமிழ் பிரண்ஸ் ஒப் லிப்ரெம் மற்றும் சர்வதேச தமிழ் ஊடகவியளாளர் சங்கம்(IATAJ) ACT NOW ஆகிய அமைப்புக்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் தகவல் மையம், தமிழ் தேசிய கூட்டமைப்பு-பிரித்தானிய கிளை, ஆகிய அமைப்புக்கள் கலந்து கொள்ளமுடியாமைக்கு வருத்தம் தெரிவித்திருந்தனர். மேலும் சில செயல் அமர்வுகள் நடைபெறவிருக்கின்றது என்ற செய்தியையும் ஏற்பாட்டாளர்கள் அதிர்வுக்கு தெரிவித்திருந்தனர்.

அதிர்வு

0 Responses to அமைப்புகளும் ஒன்றுகூடியது - பிரித்தானியாவில் மீண்டும் ஒற்றுமை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com